கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி

கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி

கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி (Oscilloscope)

 உயர் ஆடலோட்ட மின்னழுத்த அறிகுறி யொன்றை பெறுமானத்தை
 அளப்பதற்கும் அலை வடிவத்தை அவதானிபதற்கும்  பயன்படுத்தப்படும் அடிப்படை கருவி கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி பயன் படுத்தப்படுகிறது. கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி இன் திரையில் அலை வடிவத்தை வரைபாக பெறலாம். மின்னோட்டத்தின் போது அது ஒரு கோடாகவும் ஆடலோட்டத்தின் போது அலைை வடிவிலும் திரையின் மீது தோன்றும். மேலே உருவில் கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி ஒன்றின் முன்பக்கத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. எனினும் எல்லாக் கதோட்டுக்கதிர் அலைவுகாட்டிலும் காணப்படக்கூடிய அடிப்படை கட்டுப்படுத்தி மாத்திரம் இவ்வுருவில் காட்டப்பட்டுள்ளது.

1. வழங்கல் ஆளியும் காட்டி விளக்கும் 

 வழங்கள் ஆழியை மூடுவதன் மூலம் கதோட்டுக்கதிர் அலைவுகாட்டியின் சுற்றுக்கு மின் வழங்கப்படும். அவ்வாறு மின் வழங்கப்பட்டுள்ளதா என்பதை காட்டுவதற்கு காட்டி விளக்கொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. ஒளிச்செறிவு கட்டுப்படுத்தி(Intensity Comforted)

 திரையில் விழும் ஒளிர்வுள்ள மெல்லிய கோடுகளின் பிரகாசத்தினை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி வைக்கப்பட்டுள்ள இடத்திலுள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப ஒளியை தேவையானவாறு சீர்செய்து கொள்ள முடியும்.

3. குவித்தல் ஆளி

 மேலே குறிப்பிடப்பட்டுள்ள மெல்லிய கோடு தெளிவாக குவியத் செய்வதற்கு கட்டுப்படுத்தி பயன்படும்.

4. காட்சிப்படுத்தல் திரை

கதோட்டுக்கதிர் அலைவுகாட்டியின் திரையின் மீது மின் அழுத்த வேறுபாடு பெறுமானங்களை வரை பினால் காட்ட முடியும் என முதலில் குறிப்பிடப் பட்டுள்ளது. வரைபு தாளில் போன்றே இதன் திரையிலும் x அச்சு   அச்சு என்ற கோடுகள் உள்ளன.
 மேலே உருவில் உள்ள கிடை அச்சில் 10 சதுரங்கள் நிலைக்குத்து அச்சில் 6 சக்கரங்களும் உள்ளன.
 வரைபொன்றின் x,  அச்சில் உள்ளவாறே அதன் கட்டுப்படுத்தியும் x அச்சு கட்டுப்படுத்தி,  y அச்சுக் கட்டுப்படுத்தி என இரு பகுதிகளாக வேறாக்க முடியும்.

5. x அச்சு ஒழுங்குபடுத்தி

 திரையின் மீது வரையப்படும் மெல்லிய கோட்டை x அச்சின் தேவையான இடத்தில் இதன் மூலம் அமைத்துக்கொள்ள முடியும்.

6. y அச்சு ஒழுங்குபடுத்தி 

திரையின் மீது வரையப்படும் மெல்லிய கோட்டை y அச்சின் தேவையான இடத்தில் இதன் மூலம் அமைத்துக்கொள்ள முடியும்.

7. Volts/cm தெரிவுசெய்யும் ஆளி

இக்கட்டுப்படுத்தியிற்கு அண்மையில்
Volts/cm என குறிப்பிடப்பட்டுள்ளது. இது y அச்சிற்குரிய கட்டுப்படுத்தியாகும்.
 உறவில் காட்டப்பட்டுள்ள ஆளி 1 என காட்டப்பட்டுள்ள இடத்திற்கு செல்லும்போது முகப்பில் நிலைக்குத்து அச்சில் கட்டமொன்றினால் 1 வோல்ட் காட்டப்படும். ஆளியை 5 எனும் இடத்திற்குத் திரும்பும் போது ஒரு கட்டத்தினால்  5 வோல்ட்று குறிப்பிடப்படும். அதிகமாக இவ் ஆளிகள் 10  படிமுறைகள் வரைவுண்டு.

8. கிடை அதிர்வுக் கட்டுப்படுத்தி 

 ஒளிப்பொட்டொன்று கிடையாது விரைவாக செய்வதன் மூலம் திரையில் கோடுகள் வரையப்படுகின்றன    பொட்டு கிடை அச்சில் ஒரு கட்டத்தை கடப்பதற்கு எடுக்கும் காலம் இதன் மூலம் வாசிக்கப்படும். ஆளியை u S/Div இடத்திற்கு மாற்றும்போது ஒளிபொட்டு ஒரு இடைவெளியை கடப்பதற்கு எடுக்கும் காலம் 1 Micro Sec ஆகும். அவ்வாறே இவ்வாளியை 100 mS/Div
 இடத்திற்கு செல்லும்போது ஒளிப் பொட்டு கிடை அச்சில் ஒரு இடைவெளியை கடப்பதற்கு 100 மில்லி செக்கன் எடுக்கும். இவ்வாறு ஒளிபொட்டு வேகமாக இடமிருந்து வலமாக அசைவது வாற்பல் வடிவ
 அலையொன்று x அத்துடன் தொடுகையுற்றுக்  காணப்படும் சுற்றுக்கு இடுவதன் மூலமாகும். வளையின் அதிர்வெண் கட்டுப்படுத்தி மூலம் கட்டுப்படுத்துவதால் இது கிடை அதிர்வெண் கட்டுப்படுத்தி என குறிப்பிடப்படும்.

  9.வழங்கல் துணை உறுப்பு 

கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி அளவிட வேண்டிய பெறுமானத்தை இடும் துணை ஒரு போன்று கீழே உருவில் காட்டப்பட்டுள்ளது.

அது வழங்கள் துணை உறுப்பு எனப்படும். சாதாரண வழங்கள் துணைை உறுப்பு ஒன்று அச்சு வடம் ஒன்றும்,  முதலை வாய் கவிகள் இரண்டும் கொண்டு    அமைக்க ப்பட்டுள்ளது. சிக்கலான வழங்கள் துணை உறுப்புகளில் கொள்ளளவி ஒன்றுடனும் ஆளியொன்றினாலும் ஆக சுற்றிக்கொண்டது.

கதோட்டுக்கதிர் அலைவுகாட்டியை பயன்படுத்தல்

கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி ஒன்றை பயன்படுத்துவதற்கு முன்னர் அதிலுள்ள கட்டுப்படுத்தி பற்றியும்,  கட்டுப்படுத்திக்ளின்  பெறுமானங்கள் பற்றியும் சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும். 
கதோட்டுக்கதிர் அலைவுகாட்டியின் V/cm கட்டுப்படுத்தி “2” எனும் பெறுமா னத்திற்கு இடைப்பட்டுள்ளதுடன் அலையின் மறை,  நேர் பெறுமானங்களை கிடையே,  கிடை அச்சில் ஆறு பிரிவுகளும் உள்ளன. ஆகவே அவ் வலையில் உச்ச வீச்சிக்களுக்கு இடையேயான அழுத்த வேறுபாடு Vpp ஐ  V /cm இற்கு இடப்பட்ட பெறுமானத்தை பிரிக்கும் அளவுகளால் பெருக்கிப்  பெறப்படும். இதன்படி இங்கு உயர் வீச்சுக்களுக்கு இடையேயான அழுத்த வேறுபாடு 12V ஆகும். உருவில் காட்டப்பட்டுள்ளது போன்று வட்டம் ஒன்றின் ஆரம்பம் முதல் இறுதிவரை இரு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவுக்கு 5ms செலவிடப்படின் இரண்டு பிரிவுகளாக 10ms செலவிடப்பட்டுள்ளது. வட்டம் ஒன்றிற்கு எடுக்கும் நேரம் பத்து மில்லி செக்கன்கள் ஆகும். அலையின் அதிர்வெண்ணை( மீடிறனை ) இச் சூத்திரத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
f=1/T
f= மீடிறன் Hz
T= ஒரு வட்டத்திற்கு /சுற்றுக்கு எடுக்கும் நேரம்
f= 1/10*10-³
f=100Hz
தடை ஒன்றினூடாகச் செலுத்தி அதற்கு குறுக்கே யான   அழுத்த வேறுபாட்டை அளந்து மின் ஓட்டத்தை கணித்தல் வேண்டும். சில கதோட்டுக்கதிர் அலைவுகாட்டிகளில் முதல் அறிகுறிகள் இரண்டை ஒரே நேரத்தில் அவதானிக்க முடியும். அவற்றில் V/cm கட்டுப்படுத்தி கள் இரண்டு உள்ளன.

சமிஞ்சை பிறப்பாக்கி

மின்னியல் இலத்திரனியல் தொழில்நுட்பத் துறையிலே பரீட்சிப்பு, கற்றல், சேவை வழங்கல் போன்ற விடயங்களுக்காக பல்வேறு இலக்கங்களும் பல்வேறு வடிவம் கொண்ட சமிக்ஞைகளை உறவை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக பயன்படும் உபகரணம் சமிஞ்சை பிறப்பாக்கி ஆகும். சாதாரண சமிங்கை பிறப்பாக்கி ஒன்றில் கீழே காணப்படும் கட்டுப்படுத்திகளைக் காண முடியும்.

வழங்கல் ஆளியும் அறிவிப்பு விளக்கும்

 வழங்கல் ஆளியை மூடியுடன் உப காரணத்திற்கு  மின் வழங்கப்படும். அவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை உபகரணத்தை கையாளுவதற்கு அறிவிப்பதற்கு அறிவிப்பு விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அலை வடிவத்தை தெரிவு செய்யும் ஆளி

இது ஒரு ஆளியாகும். சாதாரண சமிஞ்சை பிறப்பினால் Sin வடிவ ,அலை மற்றும் வேறு வடிவங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். வேறும் சில வற்றில் மட்டிசைக்கப்பட்ட அலையை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
நன்றி…..
Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »