பிரதிபண்ணப்பட்ட சுற்றினை பூர்த்தி கொள்ளும் முறை பற்றியும் இப்பகுதியில்
விபரிக்கப்படும்.
சுற்று வரிப்படத்தைத் திட்டமிடல்
சுற்று வரிப் படத்தை திட்டமிடும் போது பயன்படுத்த வேண்டிய அச்சிடப்பட்ட சுற்றிற்கு
பொருத்தமான துணைச் சாதனங்களை இனங்காணல் முக்கியமானதாகும். மேலும் சுற்றிற்குரிய துணைச்சாதனங்களின் முனைகளுக்கு இடையில்
உள்ள இடைவெளி, முனைகளின் விட்டங்களையும் அறிந்து கொள்ளல் முக்கியமானதாகும். இது தொடர்பான விபரமொ ன் இங்கே முன் வைக்கப்படும்.
அச்சிடப்பட்ட சுற்று பலகைக்குரிய பொருட்களை தெரிவு செய்தல்
சிக்கலான இலத்திரனியல் சுற்றுக்களை அமைக்கும் போது வெரோ போட் (Vero Board) டொட் மெட்ரிக்ஸ் போட் (Dot metrics board) முதலியவற்றை பயன் படுத்துதல் கடினமாகும் இதற்காக அச்சிடப்பட்ட சுற்றுப் பலகை முறையினைப் பயன்படுத்தலாம். அச்சிடப்பட்ட சுற்றுப்பலகையினை அமைக்கும் போது ஒரு படலமாக செம்பு பூசப்பட்ட பலகை பயன்படுத்தப்படும். ஒரு பக்கத்தில் மாத்திரம் செம்பு பூசப்பட்ட பலகை இரு பக்கத்திலும் செம்பு பூசப்பட்ட பலகை எனும் சுற்றுப் பலகையும் உண்டு சுற்றிலேயுள்ள சிக்கலான துணைச்சாதனங்களைப் வகை பொறுத்துவதற்கு போதிய இடைவெளிக்குரிய சுற்றுப்பலகையை தெரிவு செய்தல் வேண்டும். செம்பு பூசுவதற்கு பின்வரும் இரு வகை பிலாஸ்டிக் பலகைகளும் பயன்படுத்தப்படும்.
1. இபொக்ஸி கடின கடதாசி வகை பிலாஸ்டிக்
(Epoxy Hard Paper)
2. பலப்படுத்தப்பட்ட கண்ணாடி (Fiber)
கண்ணாடிக் கடதாசி வகைப் பிலாஸ்டிக்
(Glass Fiber Reinforced Epoxy Paper)
இங்கு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள வகையானது அச்சிடப்பட்ட சுற்றுப் பலகையை அமைப்பதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும். ஒரு பக்க செம்பு படலம் மாத்திரமுள்ள அச்சிடப்பட்ட சுற்றை அமைப்பதற்குப் பொருத்தமான பொறிமுறை அமைப்பு உரு இலே காட்டப்பட்டுள்ளது.
தரப்பட்ட சுற்றொன்றை ஒத்த மின்னோட்டப் பாதையைத்திட்டமிடல்
தரப்பட்ட சுற்றொன்றைப் போன்ற மின்னோட்டப்பாதையை திட்டமிடுதல் இச்செயற்பாட்டின் முக்கிய அம்சமாகும். அது பற்றி அறிந்திருத்தலும் இன்றியமையாததாகும் எனவே அத்தரவுகளை திட்டமிடுவதற்கு முன்னர் சுற்றுப் பலகையைப் பெற்றுக்கொள்வது திட்டத்தினை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
தொகையீட்டுச் சுற்றொன்றுக்குரிய பல அமைப்புக்கள் காட்டப்பட்டுள்ளது.
ஓட்டப்பாதையைச் சுற்றுப் பலகையின் மீது பிரதிபண்ணல்.
அச்சிடப்பட்ட சுற்றுப் பலகையொன்றைத் தயாரித்துக் கொள்ளும் போது சுற்று வரிப்படத்தை செம்புப் படலத்தின் மீது பிரதிபண்ணிக் கொள்ளல் மற்றுமொரு படி முறையாகும். செம்புப் படலத்தின் மீது சுற்றொன்றைப் பிரதிபண்ணிக் கொள்ளும்
முறை பற்றி இங்கு விபரிக்கப்படும்.
மின் ஓட்டப்பாதையை சுற்றுப்பலகையின் மீது பிரதிபண்ணும் முறை
சுற்று வரிப்படத்திற்குரிய மின்னோட்ட பாதையை வரையும்
போது துணைச்சாதனங்களைப் பொருத்துவது தொடர்பாகவும் கவனத்தில்
கொள்ளல் வேண்டும். மின்னோட்ட பாதை செம்பு பூசப்பட்ட பலகையின் கீழ்ப் பாகத்தினுள்ளும் முனைகளின் துணைச்சாதனங்கள் செம்பு பூசப்பட்ட பலகையின் மேல் பாகத்தினுள்ளும் பொருத்தப்படல் வேண்டும். இதனால் முதலில் வரையப்பட்ட ஓட்டப்பாதைக் குரிய வரிப்படம் இதற்கு பொருத்தமானதல்ல. சில துணைச்சாதனங்களின் அமைவு ஓட்டப் பாதைக்கு இடையூறாக இருப்பதே இதற்கு காரணமாகும். இதனால் முதலிலே வரையப்பட்டுள்ள ஓட்டப் பாதையை செம்பு பூசப்பட்ட பலகைக்கு பிரதிசெய்ய வேண்டிவரும். எனவே இம்முறையில் பிரதிபண்ணினாலும் விடயம் பற்றி கருத்திற் கொள்ள வேண்டும்.
1. சுயாதீனமாக கையினால் பலகையின் மீத வரைந்துகொள்ளல்.
2. பட்டுச் சட்டக அச்சுப்பதித்தல் முறை.
3. நேர்த்திலங்கல் உணர்திறன்முறை.
சுயாதீனமாக கையினால் வரையும் முறை
இம் முறையானது பெரும்பாலும் சுற்றொன்றின் ஓட்டப் பாதையைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும். அதி சிக்கலான பாதை களையுடையதும் சாதனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும் சுற்றுக்களுக்கு இம் முறையைப் பயன்படுத்துவது கடினமாகும். துணைச் மீது சுற்றிற்குரிய ஓட்டப் பாதையைப் பரீட்சித்து தெளிவாகத் தாள் ஒன்றில் வரைந்து கொள்ளல் வேண்டும். வரையப்பட்ட உருவரிப்படத்தை பலகையின் சுயாதீனமாக கையினால் பிரதிசெய்யும் போது நீரில் கரையாத பூச்சு (Paint) பயன்படுத்தப்படும். இல்லாவிடின் நீரில் கரையாத மையையுடைய சுற்றுக்களைப் பிரதி செய்வதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ள பேனாவகையும் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு பிரதிபண்ணும் போது ஓட்டப்பாதைக்கு வெளியே பூச்சு கசியாது. பார்த்துக் கொள்ள வேண்டும். இம்முறையின் கீழ் செம்பு பூசப்பட்ட குறிக்கும் முறையொன்றும் உண்டு. அதாவது நீர் உறிஞ்சாத ஒட்டும் தன்மையுடைய தாள் ஒன்றை செம்பு பூசப்பட்ட பலகையின் மீது ஒட்டி உரிய ஓட்டப் பாதையை அத்தாளின் மீது வரைந்து கொள்ள வேண்டும். ஓட்டப்பாதை தவிர்ந்த ஏனைய பகுதிகளை வெட்டிச்சுரண்டி அகற்ற வேண்டும். இது இலகுவானதும் வெற்றிகரமானதுமான முறையாகும். ஆனாலும் இம் முறையானது கூடுதலான ஓட்டப் பாதைகளையுடைய சிக்கலான சுற்றுக்களுக்கு அவ்வளவு பொருத்தமானதல்ல.
பட்டுச்சட்டக அச்சுப் பதித்தல்
இம் முறையானது தேவை ஏற்படும் போது அச்சிடப்பட்ட சுற்றுப் பலகையைப் போன்று இன்னும் பலகைகளைத் தயாரித்துக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும்.
அச்சு முறை மூலம் சுற்றொன்றை செம்பு பூசப்பட்ட பலகைக்கு பிரதிபண்ணும் போது முதலில் பட்டுச் சட்டகத்தை உரியவாறு தயாரித்துக் கொள்ள வேண்டும். அதாவது திட்டமிட்டு வரைந்து கொள்ளப்பட்ட ஓட்டப்பாதைச் சுற்று வரிப்படத்திற்கு ஏற்ப ஓட்டப்பாதை மீதமாகும் படி பட்டுச் சட்டகத்தின் எஞ்சிய பகுதியை மறைத்துக் கொள்ள வேண்டும்.
மறைக்கப்பட்ட பகுதியினூடாக ஓட்டப்பாதைக்குள்ளே பூச்சு வடிந்து செல்லாதவாறு பார்த்துக் கொள்வது முக்கியமாகும். இவ்வாறு பட்டுச் சட்டகத்தை தயாரித்துக் கொள்வதன் மூலம் செம்பு பூசப்பட்ட பலகையின் மீது நீர் உறிஞ்சாத மையினால் சுற்றை பிரதி பண்ணிக் கொள்ள முடியும். இம்முறையை சிக்கலான சுற்றுக்களுக்கும் ஒரு சுற்றைப்போன்று பல சுற்றுக்களைத் தயாரிக்கும் போதும் பயன்படுத்தப்படும்.
ஆனாலும் இம் முறையானது அதிக செலவானதுமாகும். இதற்கு ஒளி ஊடுபுகவிடக்கூடிய தாள் ஒன்றில் அல்லது கண்ணாடி ஒன்றின் மீது தேவையான சுற்றை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு ஊடு புகவிடாத பூச்சு வகையொன்றை அல்லது அச்சிடப்பட்ட சுற்றுப்பலகைக் குறியீடிடப்பட்ட ஒட்டும் விசேட தாளைப் பயன்படுத்த முடியும். இதற்காகப் பயன்படுத்தும் விசேட தாள்களில் உள்ள சில குறியீடுகள் உரு. 2.12-3 இலே காட்டப்பட்டுள்ளது.
கண்டியொன்றின் மீது அல்லது ஒளி உட்புகவிடக்கூடிய தாளில் ஓட்டப் பாதையைக் குறித்துக் கொண்டதன் பின்னர் செம்பு பூசப்பட்ட பலகைமீது பிரதி செய்து கொள்ள வேண்டும். இம்முறையிலேயே பிரதிசெய்யும் போது செம்பு பூச்சின் மீது நேர் துலங்கல் பூச்சொன்று படலமாக பூசப்படும். அதன் பின்னர் கண்ணாடியின் மீது அல்லது ஒளி ஊடு பகவிடக் கூடிய தாளின் மீது திட்டமிட்டுள்ள ஓட்டப் பாதையை நேர் துலங்கல் பூசப்பட்ட படலத்தின் மீது வைத்து ஒளி செலுத்தப்படும் இவ்வாறு செம்பு படலத்தின் மீது ஓட்டப் பாதையை பிரதிபண்ணுவதற்கு திட்டமிட்டுள்ள முறை இல. 2.12-4 இல் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒளியைச் செலுத்துவதன் மூலம் நேரேற்ற பூச்சுடைய பலகையை சோடியம் ஐதரொட்சைட்டினால் பூச்சின் தேவையில்லாத பகுதியை கழுவி அகற்ற முடியும். சோடியம் ஐதரொட்சைட்டினால் NaOH(aq) கழுவும் போது தேவையற்ற நேர்த்துலங்கள் பகுதி அகற்றப்பட்டு ஓட்டப்பாதைக்குத் தேவையான பூச்சுப் பகுதி மீதமாகும். அதாவது தேவையான ஓட்டப்பாதையானது பலகையின் மீது பிரதிபண்ணப்பட்டிருக்கும். சோடியம் ரொட்சைட்டுத் திரவத்தை திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்திலேயே தயாரித்துக் கொள்வது நல்லது. பலகையைக் கழுவும் போது கைக்கு றப்பர் கையுறையையும் பயன்படுத்திக் கொள்வது பாதுகாப்பாகும். பலகையை திரவத்தில் கழுவும் போது ஓட்டப்பாதை தவிர்ந்த ஏனைய பூச்சுப் பகுதிகள் கழுவப்பட்டு போவதற்கான காரணம் அப்பகுதிகளுக்கு ஒளி உறிஞ்சப்பட்டு பூச்சு எரிந்து போயுள்ள தனாலாகும்.
சோடியம் ஐதரொட்சைட்டுக் கரைசலை, 7 கிராம் சோடியம் ஐதரொட்சைட்டுக்கு 1 லீற்றர் நீர் கலந்து தயாரித்துக் கொள்ள வேண்டும். இத்திரவத்தினுள்ளே அச்சிடப்பட்ட சுற்றுப் பலகையிலுள்ள தேவையற்ற படலங்கள் 30-300 செக்கன்களில் அகற்றப்படுதல் நிகழுகின்றது.
தேவையற்ற செம்பு படலங்களை அகற்றுதல்.உரிய ஓட்டப் பாதையை சுற்றுப் பலகையில் பிரதி செய்ததன் பின்னர் பலகை மீதுள்ள ஏனைய தேவையற்ற செம்பு படலங்களை அகற்றுவது முக்கியமாகும். இது பற்றி இங்கே விபரிக்கப்படும்.தேவையற்ற செம்பு படலங்களை அகற்றும் முறை
மேலுள்ள எம்முறையிலாவது செம்புப் படலத்தின் மீது ஓட்டப்பாதையை
பிரதி செய்வதோடு தேவையில்லாத செம்புப் பகுதிகளை அகற்றுதல் வேண்டும். தேவையற்ற சம்புப் பகுதியை அகற்றுவதற்காக பெரசுக்குளொரைட்டு (Fe Cl) திரவத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். இத்திரவத்திற்குள் ஓட்டப் பாதை பிரதி செய்யப் பட்டுள்ள செம்புப் பலகையை இட்டு கழுவுவதன் மூலம் தேவையற்ற செம்புப் பகுதிகளை அகற்றமுடியும்.
இவ்வாறு செய்யும் போது கைகளுக்கு றப்பர் கையுறைகளைப்பயன் படுத்துவதும் திரவத்தினுள் அசைப்பதற்காக பிலாஸ்டிக் கூர் ஒன்றையும் பயன்படுத்துவது பாதுகாப்பான முறையாகும். தேவையற்ற செம்புப் பகுதிகளை அகற்றிய
பின்னர் அச்சிடப்பட்ட செம்புப் திரவத்திலிருந்து சரியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பரீட்சித்துப் பார்க்க பரசுக்குளோரைட்டின் செறிவுத் தன்மை அல்லது ஐதான தன்மைக்கு ஏற்ப சுத்தம் செய்யப்பட்ட அளவில் குறைபாடு ஏற்படலாம்.
பற்றாசு பிடித்தலின் நியதிகள்
பற்றாசு பிடித்தல்
பற்றாசு நியதிகள் நியதிகள்
மென் பற்றாசு பிடித்தல்
தொடர்புபடுத்தும் உலோகப் பகுதிகளை சுத்தம் செய்தல்.
பாயி (FLUX)
தொழிற்பாடற்ற பாயி
தொழிற்பாடான பாயி
உரிய வெப்ப நிலைகளை பேணுதல்
ஒட்டும் பதார்த்தங்களின் பாவனை
மின்பற்றாசுக் கோல்
ஆடலோட்ட 230V இலும் குறைந்த அழுத்த வித்தியாசம் கொண்ட நேர் மின்னோட்டத்திலும் இயங்கக் கூடிய
Leave a Review