தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றின் சுற்று வரிப்படத்தை விளங்கிக் கொள்ளல்.
கிடை நிலைக்குத்து அலைவாக்கிஉருவில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி ஒன்றின் சுற்று வரிப்படம் காட்டப் பட்டுள்ளது. தொலைக்காட்சி திரையிலே ஒரு தொகுதி புள்ளிகளினாலேயே உருவம் ஒன்று தோற்றுவிக்கப்படும். கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி திரைக்கு மிக அண்மித்துப் பார்க்கும் போது இப் புள்ளிகளை தெளிவாகக் காணலாம். அவ்வாறே இப்புள்ளிகள் அலைவதையும் காணலாம். திரையில் இலத்திரன்கள் மோதுவதனால்
புள்ளி கள் ஏற்படுகின்றது. இலத்திரன் களை அசையச்செய்வதன் மூலம் அவற்றை திரை
முழுதும் மோதச் செய்ய முடியும். இவ்வியக்கம் அலைவாதல் எனக் குறிப்பிடப்படும்.
இலத்திரன் பாய்ச்சல் ஒன்றில் அதிகளவு இலத்திரன்கள் காணப்படுவதால் இவ் விலத்திரன் பாய்ச்சல் இலத்திரன் கற்றையொன்று கூடுப்படும். தொலைக்காட்சி திரை முழுமையாக ஒளிர்வடையதற்கு இலத்திரன் கற்றை அலைவடைதல் வேண்டும். அவ்வாறு அலையாவிடின் திரையில் மத்தியில்
புள்ளி ஒன்று ஒளிரும்.
இலத்திரன் கதிர் கிடையாக மாத்திரம் அலையின் உருவில் உள்ளவாறு திரையில் கிடைக்கோடொன்று ஒளிரும்.
இலத்திரன் கதிர் நிலைக்குத்தாக மாத்திரம் அலையின் உருவில் காட்டப்பட்டுள்ள திரையின் மத்தியில் நிலைக்குத்துக்
கோடொன்று ஒளிரும்.
கிடை நிலைக்குத்து அலைவுகள் இரண்டும் ஏற்பட்டால் திரை முழுதும் ஒளி ஏற்படும். கிடைநிலைக்குத்தாக அதிரும் போது ஒரு செக்கனுக்கு 15,625 கிடையதிர்வுகள் ஏற்படுவதுடன் செக்கனுக்கு 50 நிலைக்குத்து அதிர்வுகள் ஏற்படும். எனவே உயர் மீடிறன் அலைவின் உருவிற்கான தகவல்கள் உருவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உருவச்சட்டகம் ஏற்படுதல்
கிடை அலையொன்று கிடைத்திசையின் அந்தம் A யில் ஆரம்பமாகும். A யிலிருந்து B வரைகிடைக் கோடொன்று அலைவதுடன் அக்கோட்டின் மேல் உருவின் தகவல்கள் குறிக்கப்படும். மீண்டும் B இலிருந்து C வரை மிகக்குறுகிய கால இடை
வெளியில் பிரதி விம்பம் ஒன்று தோன்றும் மீண்டும் C இலிருந்து D வரை கிடைக் கோட்டின் உருவில் தகவல்கள் திரையின் மீது பதியப்படும். இவ்வாறு கிடைக்கோடானது திரையின் கீழ்நோக்கிச் செல்லும். அக்கோடு கீழ் நோக்கி அலையச் செய்வதற்கு நிலைக்குத்து அலைவாக்கி உதவும்.
கிடைக்கோடுகள் தேவைப்படும். ஒரு கோடு விட்டு ஒரு கோட்டின் மூலம் படத்தை காண்பிக்க முடிவதால் 312.5 கோடுகளின் மூலம் முழுத் திரையினுள் படம் உருவாகும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே படத்தை வாசிக்கும்
ஒழுங்கு முறைக்கு ஏற்ப 312 ஆம் கோட்டின் மூலம் முழுமையான கோடுகள் முடிவடைவதுடன் அரைவாசி அலைந்த பின்னர் ஒரு பிரிவு முடிவடையும். திரையின் 313 ஆவது கோட்டின் அரைவாசி முடிவடையும் கீழ் விழிம் பின் மையப்புள்ளியில் இருந்து ஆரம்பித்த பின்னர் மீதிக் கோட்டின் 312 ஆவது கோடு அமைவதன் மூலம் இரண்டாவது பிரிவு ஏற்படுவதோடு உருவச்சட்டகம் முழுமையாகும்.
1. முதலாவது பிரிவின் 313.5 ஆவது கோடு.
2. முதல் நிலைக்குத்து விம்பம்.
3. இரண்டாவது பிரிவின் 312.5 ஆவது கோடு.
4. இரண்டாவது நிலைக்குத்து விம்பம்.
புலக்காட்சி அலைகள்
1. வெள்ளைப்பகுதி
2. கறுப்புப் பகுதி
3. சம இயக்கக் கணு
4. ஒரு கிடை அதிர்வுக் கோட்டின் அலை
5. இருண்ட பகுதி
புலக்காட்சி சமிக்ஞை ஒன்று வெள்ளைப் பகுதிக்கு மேலேயும் கறுப்புப் பகுதிக்கு கீழேயும் அமையும். மேலே காட்டப்பட்டுள்ள திரையில் கறுப்புக் கீழங்கள் இரண்டு தோன்றியுள்ளதுடன் அடைக்கோடு B யில் உருவாகும் புலக்காட்சிச் சமிக்ஞை கீழேயும் காட்டப்பட்டுள்ளது. ஒரு இடைக் கோட்டின் முடிவிலே அக்கோடு முடிவடைவதைக் காட்டுவதற் இருண்ட பகுதியொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ் விருண்ட பகுதியின் மேல் பக்கத்தில் கரை ஒன்று அமைந்துள்ளதுடன் அக்கரை சம இயக்கக் கணு எனப்படும். எச்சந்தர்ப் பத்திலேனும் புலக்காட்சி சமிக்ஞையானது, சம இயக்கக் கணுப் பிரதேச மட்டத்திற்கு வருவதில்லை. எனவே சம இயக்க சமிக்ஞையை தெரிவு செய்வது இலகுவாகும்.
1. Antenna – உணரி
உணரிகள் VHF, UHF என இரு வகைப்படும். நவீன தொலைக்காட்சிப் பெட்டிகளில் இவ்விரு பிரிவுகளுக்கும் ஒரே ஒரு (Antena) உணரியே பயன்படுத்தப்படுகின்றது.
2. வானொலி அலை மீடிறன் விரியலாக்கி.
அன்டெனாவினால் பெறப்படுகின்ற குறைந்த அலைகளை விரியலாக்கும்.
3. அலையம்
சுபர் ஹெட்ரொடைன்
தொலைக் காட்சிப் பெட்டியினுள் பயன்படுத்தப்படுகின்றது. அதற்குத் தேவையான அலையை வழங்குவதற்கு அலையம் பயன்படுத்தப்படுகின்றது.
4. கலப்பான்
அன்டெனாவின் மூலம் பெறப்பட்ட அலையையும், அலையத்தின் மூலம் பெறப்பட்ட அலையையும் இடை நிலை மீடிறன் அலையாக இது மாற்றும்.
5. VHF இசைவாக்கி
கோண இலக்கம் 2, 3, 4 ஆகிய மூன்று பிரிவுகளும் VHF இசைவாக்கியில் அமைந்
துள்ளன.
6. இரு வாயிக் கலப்பான்
UHF அலையை VHF அலையாக மாற்றுவதற்கு இரு வாயி கலப்பான் பயன்படுத்தப்படும்.
7. UHF அலையம்
மீயுயர் ஹெட்ரொடைன் முறையைப் பயன்
படுத்தி இடைநிலை மீடிறன் UHF அலையொன்றை உருவாக்கிக்கொள்வதற்கு பயன்படுத்தும் அலையம் UHF அலையம் எனப்படும்.
8. UHF இசைவாக்கி
இது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டிகளில் தனியானதொரு பிரிவாகஅமைக்கப்பட்டுள்ளது.
9. உருவ இடைநிலை மீடிறன் விரியலாக்கி
இதில் உரு பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இடைநடு மீடிறன் அலைகளை விரியலாக்குகின்றது.
10. கட்புல வெளிப்படுத்தி
மட்டிசைக்கப்பட்டுள்ள இடைநிலை மீடிறன் அலையிலிருந்து உருவிற்கான சமிக்ஞையை தெரிவு செய்து கொள்ளும்.
11. கட்புல விரியலாக்கி
உருவத்திற்குரிய சமிக்ஞையை வாங்கும். விரியலாக்கி உருவமைக்கும் குழாயிற்குவழங்கும்.
12. சமநிலைக் கட்டுப்படுத்தி
இதன் மூலம் யாதுமொரு உருவின் கறுப்பு, வெள்ளைக்கு இடையில் நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.
13. தன்னியக்கப் பயன் கட்டுப்படுத்தி இதன் மூலம் இசைவாக்கிக்கும் இடைநிலை
மீடிறன் படி முறைக்கும், இடையிலான பயன்பாடு கூடிக் குறைவதை தடுத்து நிலையான ஒரு பெறுமானத்தில் வைத்துக் கொள்ள முடியும்.
14. தன்னியக்கப் பெய்ப்பு உபகரணம்
இதன் மூலம் கட்டுப்படுத்தி சமிக்ஞை இசைவாக்கப்பட்ட அலையை இடைநிலை
மீடிறன் படி முறைக்கு பெய்ப்பு செய்ய முடியும்.
15. இயக்க கட்புலக் காட்சியைத் தெரிவு செய்யும்
துணைச் சாதனம்இயக்க சமிக்ஞையில் அடங்கியுள்ள சம இயக்க கணுக்களை இது வேறாக்கிக் கொள்ளும்.
16. நிலைக்குத்து துணைக் கலப்பான்
இதன் மூலம் சம இயக்கக் கணுக்களில் இருந்து நிலைக்குத்து இயக்கக் வேறாக்கிக் கொள்ள முடியும்.
17. நிலைக்குத்து திரும்பல் அலையம்
நிலைக்குத்து சம இயக்க கணுவிற்கு ஒத்ததாக நிலைக்குத்து கணுக்களை உருவாக்கும்.
18. நிலைக்குத்துத் தாங்கி
இதன் மூலம் நிலைக்குத்து அலையத்தின் அலைவு மீடிறனை மாற்ற முடியும்.
19. நிலைக் குத்து திரும்பல் விரியலாக்கி.
நிலைக்குத்து திரும்பல் அலையத்திலிருந்து பயப்பு செய்யும் கணுவை விரியலாக்கும்.
20. தன்னியக்க இடை மீடிறன் கட்டுப்படுத்தி
இடைபயப்பு அலை மீடிறன்களில் ஏற்படும் மாற்றத்தை இனங்கண்டு இடை மீடிறன்
கணுக்களை சரிசெய்யும்.
21. இடைக்கணு அலையம்
இது இடைக்கணுக்களைப் பிறப்பிக்கும்.
22. இடைத்தாங்கி
இடை அலைய மீடிறன்களை இதன் மூலம் மாற்ற முடியும்.
23. இடை அலை பின்னூட்டல் உபகரணம்
தன்னியக்க இடைமீடிறன் கட்டுப்படுத்திக்கு இடை சமிக்ஞையை வழங்கும்.
24. கிடை நிலைத் திரும்பல் விரியலாக்கி
கிடைக்கணு அலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும். கணுக்களை இது விரியலாக்கும்.
25. உயர் அழுத்தச் சீராக்கி
இது உயர் அழுத்த வேறுபாட்டை நேர் ஓட்ட உயர் அழுத்த மின் அழுத்த வேறுபாடாக
மாற்றும்.
26. திரும்பல் சுருள்
இலத்திரன் கதிர்களை கிடையாகவும் நிலைக்குத்தாகவும் திரும்ப செய்வதற்கு இது உதவும்.
27. உருவமைக்கும் குழாய்
இலத்திரன் ஒன்று மின் தன்மையையும் பொஸ்பர் தியையினையும் கொண்டது.
இலத்திரன் கற்றையை அலையச் செய்வதன் மூலம் இது உருவத்தை நிர்மாணிக்கும்.
28. 5.5 MHZ பொறிச் சுற்று
கட்புலச் சமிக்ஞையில் இருந்து ஒலிச்சமிக்ஞையை இது வேறாக்கிக் கொள்ளும்.
29. ஒலி இடைமீடிறன் விரியலாக்கி.
இது 5-5 MHz டை மீடிறன் ஒலிச் சமிக்ஞையை விரியலாக்கும்.
30. ஒளிச்சமிக்ஞை வெளிப்படுத்தி
இது மீடிறன் மட்டிசைக்கப்பட்ட ஒலி அலையை மீண்டும் ஒலிச் சமிக்ஞையாக
மாற்றும்.
31. ஒலிச் சமிக்ஞை
இது ஒலிச்சமிக்ஞையை விரியலாக்கும்.
32. ஒலிபெருக்கி
இது மின் சமிக்ஞையை ஒளிச்சமிக்ஞையாக மாற்றும்.
வானொலிச் சுற்றுக்கள்
(மீடிறன் கொண்ட சமிக்ஞை) இசைவாக்கிக் கொள்வது, மாறும் கொள்ளளவி ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு தேவையான சேவையைத்தெரிவு செய்து கொண்ட பின்னர் உயர் மீடிறன்கள் கொள்ளளவி மூலம் புவித் தொடுப்பு செய்யபடுவதுடன், தாழ் மீடிறன்கள் தூண்டியின் மூலம் புவித் தொடுப்பு செய்யப்படுகின்றது.இசைவாக்கப்பட்ட சுற்றின் மூலம் தெரிவு செய்து கொள்ளப்படும் மீடிறன் கொண்ட சமிக்ஞைகள் நேரடியாகவே காது பன்னிக்கு அனுப்பப்பட்டால் மேல்முக கேள் தகைமைச் சமிக்ஞைகள் நடு நிலையாக்குவதால் எந்த ஒரு ஒலியையும் கேட்க முடியாது.
1. மேல் புறச் சமிக்ஞைகள்.
2. கீழ் புறச் சமிக்ஞைகள்.
1.இருவாயியிற்குப் பெய்புச் சமிக்ஞை.
2. இருவாயியின் பயப்புச் சமிக்ஞை.
கருவி ஒன்றின் சுற்று வரிப்படம் உரு இன் மூலம் காட்டப்பட்டுள்ளது.
சமிக்ஞை விரியலாக்கி கொண்ட TRF வானொலிக் கருவி
இச் சுற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உணர்திறனை அதிகரித்துக் கொள்ள முடியுமாயினும்,சேவைகள் நெருக்கமாக அமைந்துள்ளமையினால் தெளிவான கேட்டல் நிலையைப் பெற்றுக்கொள்வதிலும் கடினமான நிலை (தெரிவு செய்து கொள்ளும் கடினமான நிலை) இன்னும் காணக்கூடியதாக உள்ளது.மீதரவலின் ரேடியோ
இசைவாக்கப்பட்ட சுற்று மூலம் தெரிவு செய்து கொள்ளப்படும் மீடிறன்களும், அலையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மீடிறன்களும். கலப்பானின் மூலம் பிற இடை நிலை மீடிறன்களாக மாற்றும்வானொலிக் கருவிகளின் தொழிற்பாடுச் சுருக்கக் குறிப்புக்களின் மூலம் தெளிவுபடுத்துவது, தொடர்பாக விளக்கங்கள் இப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மீதரவலின் ரேடியோவிலுள்ள பிரதான பகுதிகள்
1. இசைவாக்கும் சுற்று.
2. தேசிய அலையம்.
3. கலப்பான்.
4. இடைநிலை மீடிறன் விரியலாக்கி.
5. மட்டிசைப்பான்.
6. கேள் மீடிறன் விரியலாக்கி.
இசைவாக்கும் சுற்று (கட்டம்-1)
தேசிய அலையம் (கட்டம் – 2)
படும் அலைகளின் மீடிறன், இசைவாக்கும் சுற்று தெரிவு செய்து கொண்ட மீடிறனுக்கு பொருத்தமானதாக இருக்கும். எனவே இசைவாக்கும் சுற்று அலையச் சுற்றுக்கும் இடையே மீடிறன்கள் பொருத்தமானதாக இருப்பதற்கு இசைவாக்கும் சுற்றின் இரட்டைக் கணிச்சி அலையச் சுற்றுடன் இணைக்கப்பட்டுக் காணப்படும். அலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் எல்லா சந்தர்ப்பத்திற்குறிய மீடிறன்கள், இசைவாக்கும் சுற்று தெரிவு செய்து கொண்ட மீடிறன்களை விட 465 KHz அதிகமாகும். (சாதாரணமாக இது 445 KHz முதல் 470 KHz வீச்சத்துக்குள் இருக்கும்). இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வானொலி மீடிறன் அலைகள் கலப்பானுக்கு அனுப்பப்படும்.
கலப்பான் (கட்டம் -3)
இடைநிலை மீடிறன் விரியலாக்கி (கட்டம் – 4)
மட்டழிப்பான் (கட்டம் – 5)
வழங்கப்படும்.
கேள் மீடிறன் விரியலாக்கி (கட்டம் – 6)
மட்டழிப்பானின் மூலம் மட்டழிக்கப்பட்டு பெய்ப்பாக வழங்கப்படும் சமிக்ஞை கேள் மீடிறன் விரியலாக்கி மூலம், விரியலாக்கப்பட்டு ஒலிபெருக்கிக்கு வழங்கப்படும். இச் சமிக்ஞையை ஒலிபெருக்கி கேள் மீடிறன் அலையாக மாற்றும். (சுபர் ஹெட்) மீதரவலின் ரேடியோ ஒன்றின் செய்முறைச் சுற்று வரிப்படம் உரு இல் தரப்பட்டுள்ளது.
Leave a Review