மின்காந்தவியல் ( Electromagnetism ) பிரயோகம்

magnetic field lines, magnetism, electromagnetic field
எமது பூமியி ல் இயற்கையாகவே காந்தப்புலம் உள்ளது. இதனைப் பயன்படுத்தியே திசைகாட்டி  செயற்படுகின்றதது. நாம் செயற்கையாகவும் காந்தப்புலத்தை உருவாக்கலாம். இதற்கு காந்தவியலுக்கும் மின்னியலுக்கும் இடையிலான தொடர்பு பயன்படுத்தப்படுகின்றது.
செயற்கையாக காந்தப்புலம் இன்று நாளாந்த செயற்பாடுகளில் பரந்த விச்சில் பயன்படுகின்றது. காரின் தொடக்க மோட்டார், தொலைகாட்சி குழாயில் படத்தைப் பெறுவதற்க்கு இலத்திரனியல் கற்றையின் திசையை ஒழுங்குபடுத்தல் போன்றவற்றுக்கு காந்த புலம் பயன்படுகின்றது.
உலக விஞ்ஞானத்துறையில் செயற்கை காந்த புலம் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது. மிகமுக்கிய உபகரணமாகிய துணிக்கை ஆர்முக்கி (Practical Accelerator) இல் உபஅணு துணிக்கைகளின் அடிப்படைக்கட்டமைப்பை  ஆராயப்பயன்படுகின்றது. இதற்கு காந்தப்புலத்திலிருந்து வரும் வரிசையில் அணுக்கள் நொருக்கப்படுவதுடன் உபவணுத் துணிக்கைகளுக்கு மிக உயர் கதி கொடுக்கப்படுகின்றது. அத்துடன் இரசாயனவியலில் திணிவுத்திருசியமானியிலும் காந்த புலம் பயன்படுகின்றது.
மின்னோட்டத்தின் காந்த விளைவு
மின்னோடத்தைக் காவும் கம்பியினால் அதற்கு  அண்மையில் உள்ள காந்த ஊசியை திருப்பிவைக்கா முடியும் என்பதை முதன்முதலில் ஒஸ்ரேட் (Oersted) இல் கண்டுபிடித்தார். மின்கலத்திற்கு இணைக்காப்பட்ட கம்பியை காந்த ஊசிக்கு செங்குத்தாக வைக்கும் போது காந்த ஊசியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் மின்னோடும் கம்பிக்கு சமாந்தரமாக காந்த ஊசியை வைக்கும் போது காந்த ஊசி காந்த நள்வானை விலத்தி திரும்பி திரும்பும் திசை மின்னோட்டத்திசையை சார்ந்துள்ளது என்பதையும் கண்டறிந்தார்.
காந்த ஊசிக்கு மேல் வைக்கப்பட்ட மின்னோடும் கம்பி
காந்த ஊசிக்கு கீழ் வைக்கப்பட்ட மின்னோடும் கம்பி

 

 
 கடத்தியில் மின்னோடும் போது மட்டுமே அதனை சூழ காந்த புலம் காணப் படுகின்றது. ஆனால் காந்த திண்மங்களை சூழ எப்போதும் காந்த புலம் காணப்படுகின்றது. அவை நிரந்தர காந்தம் எனப்படும். காந்தபுலத்தில் சுயதினமாக காந்தம் ஒன்றை கட்டி தொங்க விட்டால் வடக்குதெற்கு திசையில் ஓய்வுக்கு வரும். இத்தத்து வத்தின் அடிப்படையிலேயே காந்த ஊசி அசைக்கபட்டுள்ளது. இக்காந்த ஊசியை ( திசைகாட்டும் ஊசி ) யைக்கொண்டு காந்தவிசைக் கோடுகளின் போக்கை அறியலாம். காந்த வசைகோடுகள் ஒன்றை ஒனறு வெட்டாது. இவை வடமுனைவிலிருந்து ஆரம்பித்து தென்முனைவில் முடிவடைகின்றன போல் தோன்றி னானும் அவை ஆரபத்தையோ முடிலையோ கொண்டிராது தொடர்சியனவை.

 

 காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட மின்னோட்டததைக்காவும் கடத்தியில் செற்படும் விசை

மின்னோட்டத்தைக் காவும் கடத்தி ஒன்று காந்தப்புலத்தில் வைக்கும் போது அதில் ஓர் விசை தாக்கும். இவ்விசையின் இயல்பை அறிவதற்கு மின்னோட்டத்தரசு பயன்படுத்தலாம்.
மின்னோட்டத்தராசு

 

PQRS என்னும் செவ்வக வடிவலான செப்புக்கம்பித்தடமானது XY என்னும் கத்திவிளிம்புகளில் கிடையான தாங்கப்பட்டுள்ளது. கத்திவிளிம்புகள் ஒரு மின்சுற்றுக்கு இணைக்கப்பட்டுள்ளது.
PQRS இனூடு மின்னோட்டம் பாயாதிருக்க A யில் ஒரு காவலி பொருத்தப்பட்டுள்ளது. மின்னோட்டம் செல்லாதிக்கையில் தராசு சமன செய்யப்படும். PQRX மின்னோட்டத்தை செலுத்தும் போது காந்த புலம் காரணமாக PQ இல் ஓர் வசை தாக்கும். இவ்விசை கீழ் நோக்கியிருக்கத்தக்தாக மின்னோட்டத்தை செப்பம் செய்க. தட்டில் நிறைகளை வைத்து தராசை சமநிலைப்படுத்துக. இந்நிறை (W) ஆனது PQ இல் தாக்கும் விசை F இற்கு விகிதசமன்.
அதாவது F∝ W
மாறும் தடை R ஜ மாற்றும்வதன் மூலம் மின்னோட்டம் I ஜ மாற்றி
 F∝ I  எனவும் 
காந்தப்புலம் தொழிற்படும் கடத்தியின் நீளம் l ஜ மாற்றும்வதன் மூலம்
                                                    F∝I  எனவும் பெறலாம்.
FIl
F=BIl இங்கு B  ஓரு மாறிலி
இம் மாறிலி அவ்விடத்திலுள்ள காந்தப்பாய அடர்த்தி எனப்படும்.

 

 

 

Def: 

 

காந்த புலம் ஒன்றுக்கு செங்குத்தாகவுள்ள ஒரலகு நீளமான மின்னோட்ட ட மூலகம்  ஒன்று ஓரலகு மின்னோட்டத்தை காவும் போது அது அனுபவிக்கும் காந்தவிசை அவ்விடத்திலுள்ள காந்தப்பாய அடர்த்தி எனப்படும்.
B=F/Il   B யின் அலகு N A -¹ m -¹ அல்லது  (ரெஸ்லா) அல்லது Wb m -²
காந்தவிசையின் திசையை அறிவதற்கு பிளமிங்கின் இடக்கை விதி பயன்படுத்தபபடும்.

 

மின்காந்தத் தூண்டல்

ஓரிடத்தில் காந்த இயல்பு உள்ளபோது அது இன்னுமோர் இடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தாக்கம் ஏற்படுவதை தத்துவத்தை அதன் இனங்காணும் விதத்தை அறிந்திருப்பதும் பயனுடையதாகும். பயன்படுத்தி செய்யப்படும் உபகரணங்களை பலவற்றை மின்னியல் காணலாம். இங்கு அவை பற்றிய விரிவான தகவல்கள் கீழ்வருமாறு…

மின்காந்த தூண்டலும் தூண்டல் திறனும் எதிர் மின் இயக்க விசையும்

மின் இலத்திரனியல் துறைகளில் பல்வேறு துணை சாதனங்களின் தொழில் பாட்டிற்கு மின்காந்தத் தூண்டல் பயன்படுகின்றது. தூண்டல் திறன், தூண்டிகளின் பயன்பாடு, எதிர் மின் இயக்க விசை என்பன பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். சுருள் ஒன்றின் தூண்டல் திறன் அதற்கு பயன்படுத்தும் அலகு, பயன்படுத்தும் அகணி என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடும் என்பது பற்றியும், மேற்கொள்ளப்படும் பணிக்கு ஏற்ப துண்டிற்குப் பொருத்தமான மூலப் பொருட்களை தெரிவு செய்து கொள்ளல் பற்றியும், அளவிடும் உபகரணங்களைப் பயன்படுத்தி தூண்ட சுருள்கள் இடையில் துண்டிக்கப் பட்டுள்ளதா எனப்  பரிசீலித்தல் போன்ற விடயங்கள் பற்றியும் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

மின் இயக்க விசை தூண்டப்படுதல்

காகித அட்டையினாலான உருளையொன்றின் மேல் சுற்றப்பட்ட கம்பிச் சுருள் ஒன்றின் இரு முனைகளுக்கும் இடையே மைய பூஜ்ஜியம் கல்வனோமானியை இணைத்து உருளையின் ஒரு முனைக்கு சட்டக்காந்தத்தின் வட முனையை உட்செலுத்தும் போது கல்வனோமானி காட்டி ஒரு பக்கத்திற்கு திரும்பல் அடையும் கீழே உருவில் காட்டப்பட்டுள்ளது

காந்தத்தை சுருளிற்கு உள்ளே கொண்டு செல்லல்

மீண்டும் அட்டையிலான உருளையினுள் உள்ள சட்ட காந்தத்தை வெளியே எடுக்கும்போது கல்வனோமானி காட்டி எதிர்திசையில் திரும்புவதை காணலாம் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட நிகழ்விலிருந்து கம்பிச் சுருள் ஒன்றினு மின்னியக்க விசையொன்று  தூண்டப்படுவது தெளிவாகின்றது.

மேலுள்ள அதே சுருளினுல் சட்டக்காந்தத்தின் தென் முனையை உட்செலுத்திய போது  கல்வனோமானியின் காட்டி மேலே குறிப்பிட்ட படத்தில் காட்டப்பட்ட திசைக்கு எதிர்திசையில் திரும்பும். இது கீழே உருவில் கட்டப்பட்டுள்ளது.

மீண்டும் சுருளில் உள்ள காந்தம் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது கல்வனோமானி காட்டி மேலே குறிப்பிட்ட திசைக்கு எதிர் திசையில் திரும்பும். இதை கீழே உருவில் விளக்கப்பட்டுள்ளது.

உருவில் காட்டப்பட்டுள்ள விதத்தில் கம்பிச் சுருளின் திசைக்கு சட்டக் காந்தத்தின் வட முனையை அசைக்கும் போது சுருளின் மீது மோதும் காந்தவிசை கோடுகளின் அளவு அதிகரிப்பது மட்டுமன்றி அதற்கு எதிர்திசையில் சுருளினுள் காந்தப்புலம் ஒன்று ஏற்படும்.

கம்பி வளையத்தை நோக்கி காந்தத்தை அசைத்தல்.

இச்செயற்பாடு மேலே உருவில் காட்டப்பட்டுள்ளது மேலும் கம்பிச்சுருள் பாயும் இடப் பக்கமாக செல்லும்.

கீழே உருவில் காட்டப்பட்டுள்ள வாறு சட்டக்காந்தத்தின் படிப்படியாக வெளியே எடுக்கும்போது கம்பிகளின் மீது மோதும் காந்தவிசை கோடுகளின் அளவு படிப்படியாக குறையும்.
காந்தத்தை கம்பிச்சுருளுக்கு வெளியே அசைத்தல்

 

இச்செயற்பாடு மேலும் உருவில் காட்டப்பட்டுள்ளது . இதன்போது வலதுபக்கத்தில் மின்னோட்டம் பாயும். மேலும் விடயங்கள் யாவற்றையும் கருத்தில் கொண்டு பின் வரும் முடிவுக்கு வரலாம்.

கல்வனோமானி இணைக்கப்பட்ட சமனான சுற்றுக்களையும் சமனான விட்டத்தையும் கொண்ட நீளம் கூடிய, குறைந்த கம்பிச்சுருள் கல் இரண்டு உள்ளன. அசையும் சட்டகாந்தம் இரண்டையும் மேற்குறிப்பிட்ட சுருள்கள் இரண்டிற்கும் அருகே கொண்டு செல்லும் போது நீளம் குறைந்த கம்பிச்சுருள் க்கு இணைக்கப்பட்டிருந்த கல்வனோமானி வாசிப்பு நீீீளம் கூடிய கம்பி சுருளில்  இணைக்கப்பட்டிருந்த  கல்வனோமானி வாசிப்பை விட குறைவாக காணப்பட்டது.

 

 

மேற்குறிப்பிட்ட நான்கு சந்தர்ப் பங்களில் இருந்தும் பெற்ற முடிவு களுக்கு ஏற்ப தூண்டல் திறனை பாதிக்கும் முக்கிய காரணிகள் நான்கையும் பின்வருமாறு குறிப்பிடலாம்.

  • கடத்தி கம்பிச் சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை.
  • அகணியாக பயன்படுத்தப்பட்டுள்ள பதார்த்தம்.
  • சுருளின் குறுக்குவெட்டு முகப் பரப்பளவு.
  • சுருளின் நீளம்
உங்கள் வீட்டில் உள்ள மின் உபகரணங்களில் கம்பிச்சுருள்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களை கொள்ளுங்கள். அவற்றில் சிலவற்றை இவ்வாறு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.

படி குறை நிறை மாற்றிநூல் கடத்தி கம்பிச் சுருளுக்கு மேலதிகமாக மென் இரும்பு தகடு பயன்படுத்தப் படுகின்றது.  FM வானொலி இயந்திரத்தினுள் உள்ள ரேடியோ மிடிறன் அலகினுள் (RF Section) அகணியாக வளியைக் கொண்ட  குறைந்த சுற்றுக்களுடைய சுருள் பயன்படுத்தப்படுகின்றது. சில சுருள்களில் மென் இரும்புக்குப் பதிலாக பரய்ட்டு பயன்படுத்தப் படுகின்றது.

பரய்ட்டின் விஷேட இயல்பு யாதெனில் அகணியினுள் செல்லும் காந்த விசைக் கோடுள்ள வெளியே செல்வது குறைவாகும் அல்லது வெளியே செல்வதில்லை. மேலும் அகணிக்கு வெளியே  ஏற்படும் புலம் காரணமாக அகணியுள் உள்ள புலத்தின் செறிவு குறையாது பாதுகாக்கப்படும்.

பல்மானியை பயன்படுத்தி கடத்தி கம்பிச்சுருளின் தொடர்ச்சியை பரீட்சிக்கலாம். பல் மானியின் முகப்பில் ஓம் அளவு வீச்சில் 1ohm பயன்படுத்தி கீழே உருவின் காட்டப்பட்டுள்ளது சுருளை பல் மானியின் இணைத்து சுருளின் தொடர்ச்சியை பரீசிக்கலாம். சுருள் உடைந்தது தொடர்ச்சியாக இருப்பின் பல் மானியின் காட்டி குறைந்த ஓம் பெறுமானத்தை காட்டுவதுடன் சுருள் உடைந்து காணப்படும் கூடிய அல்லது முடிவிலி பெறுமானத்தை காட்டும்.

சரியான சுருள் தொடர்ச்சியை பரீட்சித்தல்.

 

எதிர் மின் இயக்க விசை (தற்றூண்டல்)

சுருளொன்றுக்கு குறுக்கே அழுத்த வேறுபாடொன்றை வழங்குவதற்காக ஆளியை திறக்கும்போது சுற்றினூடாக மின்னோட்டம் பாய ஆரம்பிக்கும். இம் மின்னோட்டம் அதிகரிக்கும் போது காந்தப் புலமும் அதிகரிக்கும் காந்தப் புலத்தினால் அச்சுருள் வெட்டப்படுவதால் மின் இயக்க விசை ஒன்று ஏற்படும். ஏற்படுவதை கீழே படத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. இம் மின் இயக்க விசை வழங்கப்படும் அழுத்த வேறுபாட்டின் திசைக்கு எதிர்திசையில் கொண்டிருக்கும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே மின் வழங்கும்போது ஆளியை திறந்தவுடன் சுருளினூடகப் பாயும் மின் ஓட்டம் உயர் பெறுமானத்தை அடைவதில்லை. இதற்கு காரணம் தூண்டப்பட்ட சிறுது நேரத்திற்கு நிலைத்திருப்பதாகும் இவ்வாறு எதிர்திசையில் உற்பத்தியாகும் அழுத்த வேறுபாடு எதிர் மின்னியக்க விசை அல்லது தற்தூண்டல் எனக் குறிப்பிடப்படுவதுடன் அது தூண்டப்படும் அழுத்த வேறுபாடாகும்.
துணைச் சாதனங்கள் சிலவற்றில் எதிர் மின்னியக்க விசை தூண்டப்படும் சந்தர்ப்பங்களாக அஞ்சலியின் சுருள் , புளோரொளிர்வுக் குழாயின் தடக்குச் சுருள் (Choke) , மின்மோட்டார் என்பவற்றை கொள்ளலாம்.

படத்தில் சுருள் உடைந்துள்ளது.

அளக்கும் கருவிகள்

மின்னியல் இலத்திரனியல் துறையிலே  சுற்றுக்களை திட்டமிடும் போது, சுற்று
அமைக்கும் போது, செயல்படுத்தும் போது, புதுப்பிக்கும் போது, மின்னோ
ட்டம்,தடை, மின்னழுத்த வேறுபாடு, மீடிறன் முதலியவற்றை அளக்க வேண்டி
எற்படும். இதற்காக பல்மானி(Multi meter) , கதோட்டுக்கதிர் அலைவு காட்டி
(Oscilloscope), சமிக்ஞை பிறப்பாக்கி என்பவற்றைப் பயன் படுத்த வேண்டி
யேற்படும். இங்கு அதுபற்றிய விளக்க ங்கள் பின்வருமாறு

 பல்மானி (Multi meter)
 
நேரோட்ட ஆடலோட்ட மின்னோட்டம், அழுத்த வேறுபாடு, தடை போன்ற கணியங்களை
அளக்கக் கூடிய கருவி (Multi meter) எனும் பல்மானியாகும். பல்வேறு
வீச்சுக்களைக் கொண்டதும் கையடக்கமானதுமான இக்கருவியை எங்கும் எடுத்துக்
செல்லாம்.
பின்வருமாறு பல்மானிகளை வகைப் படுத்த முடியும்.

காட்டி முகப்புடைய பல்மாானியின் முகப்பில் இலக்கங்ளும்

காட்டி, ஊசியும் அமைக்கப் பட்ட்டிருப்பதுடன் அதன் தொழிட்படுக்காக அசையும்
சுருள்  மானியொன்றும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இலக்க சுட்டியுடைய
பல்மானியில் இலக்கங்ளைச் காட்சிபடுத்த்ப்படக் கூடிய முகப்பு ஒன்று உள்ளது,
அதில் அளவுப்பெறுமனம் இலக்கங்களின் காட்சிப்படுத்தப்படும்.
 
அசையும் சுருள்மானி 
 
அசையும் சுருள் மனி மெல்லிய உலோகச்சட்டமொன்றின் மீது சுற்றப்பட்டுள்ளது
கருளொன்றினாலும் அதன் இரு பக்கமும் வைக்கப்பட்ட நிலையான கந்தமொன்றினாலும்
அமைக்கப்பட்டுள்ளது. சுருளானது சுயதீனமாக இயங்கக் கூடியவாறு
பொருத்தப்பட்டுள்ளது. தூரிகைகள் இரண்டின் மூலம் கருளுக்கு மின்
வழங்கப்படும். சுருளினூடாக மின்னோட்டத்தைச் செலுத்த்ம் போது, அங்கு
காந்தப்புலம் ஏற்ப்படும். இந்தக் காந்தப்புலம் நிலையான காந்தப்புலம்
காரணமாக ஏற்ப்படும் காந்த விசையினால் சுருளானது சுழலும். இயஙகும்
தொகுதியின் அச்சில் பொருத்தப்பட்டுள்ள காட்டியும் இதனுடன் அசையும். இங்கு
இடப்பட்டும் உள்ள ஒழுங்கான அளவீடு மூலம் இயக்கத்துக்கு ஒத்த பெறுமானத்தை
வாசித்துக் கொள்ள முடியும்.

உருவில் அசையும் சுருல்மானியொன்றில் சுருளும்,  அந்த சுருள் காந்த முனைகளுக்கு இடையில் அமைந்துள்ள விதமும்  காட்டப் பட்டுள்ளது.

முழு அளவிலான திரும்பல் மின்னோட்டம் 
 
 அளவிடை முகப்பின் ஒரு முனை இருந்து மறுமுனை வரை காட்டியை அசைப்பதற்காக
சுருளினுடாக பாய்ந்து செல்ல வேண்டிய உச்ச மின்னோ ட்டத்தின் அளவு முழு
அளவிலான திருப்பல் மின்னோட்டம் எனப்படும்.
 மானி  ஒன்றின் உணர்திறன் 
 
 உருவில் மானிகள் இரண்டின் முகப்புகள்  காட்டப்பட்டுள்ளது.
இவற்றில்  உரு 1 ல் உள்ள மானி ஊடாக 50 uA மின் ஓட்டம் பாயும் போது அதன்
காட்டி திரும்பல்  அடைகின்றது. எனினும் உரு 2 யில் காட்டப்பட்டுள்ள
மாானியின் ஊடாக 500 uA மின் ஓட்டம் பாயும் போதே அதன் காட்டி திருபல்
அடைகின்றது. எனவே உரு 1 இல் உள்ள மானியின் உணர்திறன் உயர்வானது.

 

மானி ஒன்றின் அகத்தடை

 

 மேலே விலக்கப்பட்ட மானி, மின் ஓட்டத்தை அம்பியரில் அளவிடக்கூடிய
மானியாகும் அதனுடு மின் ஓட்டம் பாயும் போது, சுருள் காரணமாக பாயும்
மின்னோட்டத்திற்குத் தடங்கள் ஒன்று ஏற்படும். அவ் ஓட்டமானது சுருள் உள்ளே
பாயும் போது அதற்குக் குறுக்கே மின்னழுத்தம் ஒன்றை ஏற்படுத்தும்.

 சுருளின் தடை 1 கிலோ ஓம் உடைய மானியினுள் 1 மில்லி அம்பியர் மின் பாயும்
போது பூரணமாக திரும்பலைக் காட்டு மாயின் அதற்குத் தேவையான மின்னழுத்த
வேறுபாட்டின் அளவு V=IR என்னும் சமன்பாட்டைப் பயன்படுத்தி கணிக்க முடியும்.
V=IR
V= மின்னழுத்த வேறுபாடு
I= பாயும் மின் ஓட்டம்
R= சுருளின் தடை
V=0.001*1000=IV
 இதனால் சுழலுக்கு குறுக்கே மின் அழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும்.
அவ்வாறு பாயும் மின்னோட்டம் ஆனது முதல் பெருமானின் அரைவாசி ஆகும் போது
(0.5MA) சுருளுக்கு குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாடு (0.5A) ஆகும்.
V=IR
   =0.0005*1000
   =0.5 V
 எனவே சுருளுக்கு குறுக்கே உருவாகும் மின் அழுத்த வேறுபாடு சுருளின் ஊடாக
பாயும் மின்னோட்டத்தின் விகிதசமன் என்பது தெளிவாகிறது. இதன்படி மானியின்
மின்னோட்டத்தின் அளவிற்கு பதிலாக மின் அழுத்த வேறுபாட்டின் அளவு
குறிப்பிடப்படும் பொழுது, மின்னழுத்த வேறுபாட்டை அளக்க கூடிய மானியை
அமைத்துக் கொள்ள முடியும். பூரண திரும்பலுக்கு 1 வோல்ட் அளவு தேவைப்படும்
சுருளின்  மூலம் 10 வோல்ற்றை அளந்து கொள்ளத் தேவைப்படின்  சுருள்லுடன்
தடையொன்றைக் தொடராக தொடுக்க வேண்டும்.

 

 உருவில் காட்டப்பட்டுள்ளவாறு இதற்கு தடை ஒன்றை தொடராக  தொடுப்பதன் மூலம் அதனை வோல்ட் மானியாக மாற்றிக்கொள்ள முடியும்.
1. அசையும் சுருளின் தடை
2. தொடரான தடை
 
துணைச்சுற்று அமைத்தல் 
 
 அசையும் சுருள் மானியின் ஊடாக உயர் ஓட்டமொன்று பாய்ந்து செல்ல முடியும்.
சுருளில் சுற்றப்பட்டுள்ள மிக மெல்லிய காவல் இடபபட்டுள்ள கம்பியே இதற்கு
காரணமாகும். அமையும் சுருள் மானியின் மூலம் உயர் ஓட்டம் ஒன்றை கணிப்பதற்கு
சுருளி க்கு சமாந்தரமாக தடையை ஒன்று தொடுக்க வேண்டும். அவ்வாறு இடப்படும்
தடையில் ஆனது துணை சுற்றுத் தடையில் எனப்படும். அசையும் சுருள்  மானி
ஒன்றுக்கு துணைச்சுற்று தடையொன்று தொடுக்கப்பட்டுள்ள வீதம் பற்றி கீழே உரு
காட்டப்பட்டுள்ளது

 

சுருளுக்கு குறுக்கே 1,  வோல்ட் வழங்கப்பட்டுள்ளது எனக் கருதினால் 10Ω தடையின் ஊடாக பாயும் மின்னோட்டம் I=1/10=0.1 ஆகும். 5Ω தடையின்
ஊடாக பாயும் ஓட்டம்I=1/5=0.2 ஆகும். கணிப்பிற்கு ஏற்ப சுருளிக்கு வெளியே
தொடுக்கப்படும் தடையின் தடைப் பெறுமானம் சுருளின் தடையை விட அரைவாசியாகும்
போது, இவ்வெளித் தடையினுடாக செல்லும் மின்னோட்டத்தைை போல் இருமடங்கு
மின்னோட்டம் பாயும். எனவே தடையி ஒன்றினுடாகப் பாயும் மின்னோட்ட மானது அதன்
தடையின்  பெறுமானத் திற்க்கு நேர்மாறு விகித சமனாகும்.
முகப்பும் காட்டியும் கொண்ட மின் பொறிமுறையில் தயாரிக்கப்பட்ட, மானி
ஒன்றின் சுருள், அழுத்த வேறுபாடு, மின்னோட்டம் என்பவற்றை அளவிடும் போது
தொழிற்படுவது, வெளிச்சுற்று ஒன்றின் மூலம் வழங்கப்படும், மின் ஓட்டத்தின்
மூலமேயாகும். தடையை அளவிடும்போது மாத்திரம் அக மின்கல அடுக்கு சுற்றுக்கு
தொடராய் அமையும்.
மானியைப் பயன்படுத்தாத போது மடக்கைச் சுற்றாக அமைந்து காணப்படாவிடினும்
மின்கல அடுத்து சேதம் ஏற்படுவதில்லை. எனவே இம்மானிக்கு ஆளி On/Off
தேவைப்படுவதில்லை. முகப்பும் காட்டியும் கொண்ட இலத்திரனியல் பொறிமுறையில்
அமைக்கப்பட்ட அசையும் சுருள் மானியிலும், இலக்கங் கொண்ட மானிகளிலும் இலக்க
காட்சிப்படுத்தல் தொழில் படுவது அகச்சுருள்றொன்றின் மூலகமேயாகும். இச்
சுருளுக்கு மின் வழங்குவதற்கு உள்ளக வழங்கி ஒன்று அவசியமானதாகும். இதை
தொழிற்படுவதற்கு On/Off ஆளியொன்று அவசியமாகும். இச் சுற்றின் மின் அழுத்த
தடை விகிதம் மிக உயர்வாகையால், இலத்திரனியல் மானி ஒன்றின் முதல் நிலை அகத்
தட விகிதம் மிக அதிகமாகும்.
பெறுமானம் 10mΩ/V  – 100mΩ/Vவரை இருக்கலாம். இங்கு அசையும்
சுருள், மின்சுற்று ஒன்றின் மூலம் தொழிற்படுவதனால் தடையை அளக்கும்போது
இடமிருந்து வலமாக வாசிக்குமாறு அளவீடு இடப்பட்டுள்ளது.மின் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மானியில் தடையை வாசிப்பதற்காக வலமிருந்து இடமாக இடப்பட்டுள்ளது.

 

மானி ஒன்றின் மூலம் மின்னழுத்த வேறுபாட்டை அளவிடல்

 சுற்றொன்றினுள்ள  துணைப்பாகம்    மொன்றிற்கு  குறுக்கேயுள்ள அழுத்த
வேறுபாட்டை அளப்பதற்கு பல்மானியை துணைபாகத்திற்குச் சமாந்தரமாக தொடுக்க
வேண்டும்.

மேலே காட்டப்பட்ட உருவில் R1 இனுடாக மின் பாயும்போது அதற்கு குறுக்கே
உருவாகும் மின் அழுத்தம் வேறுபாட்டை அளப்பதற்கு வோல்ட் மானியை தொடுக்கும்
போது அதனுடாக மின்னோட்டம் பாயும். இச் சந்தர்ப்பத்தில் தடையினுடாகப் பாய
வேண்டிய மின்னோட்டத்தின் அளவு மாறுபடும். சரியான  அளவீட்டை
பெற்றுக்கொள்வதற்கு வோல்டமானி இன் தடையின் அளவு முடிவிலி ஆக இருக்க
வேண்டும். இது பரிபூரண வோல்டமானியொன்றுக்கு  இருக்க வேண்டிய இயல்பாகும்.
இதனால் மிக உணர்திறன் உடைய மின்மானியொன்று மின்னழுத்த வேறுபாட்டை
அளப்பதற்கு தொடுக்கும் போது அதன் தடை பெறுமானம் கூடியதாக இருக்க வேண்டும்.
 மேலும் உயர் அழுத்த வேறுபாட்டு பெறுமானங்களை அளவிடுவதற்கு ஏற்றவாறு
இம்மானியின் அழுத்த வேறுபாட்டு அளவு திட்டத்தினை உயர் அழுத்த வேறுபாட்டின்
அளவிட கூடியவாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அளவிட வேண்டிய அழுத்த வேறுபாடு
உயர்வானும் அதை அசையும் சுளுக்கு குறுக்கேயும் உரிய அழுத்த தடைக்கு
குறுக்கேயும் பேணிக்கொள்ள வேண்டும். அளவிட வேண்டிய அழுத்த வேறுபாடு
உயர்வாய் இன் அளவிட வேண்டிய அழுத்த வேறுபாடு உயர்வாயினும் அசையும்
சுருளுக்கு குறுக்கே மாறா அழுத்த வேறுபாடுப் பெறுமானமொன்றைப் பேணிக் கொள்ள
வேண்டும். மீதமுள்ள அழுத்த வேறுபாட்டை தடைக்கு குறுக்கே பேணிக்கொள்ள
வேண்டும்.எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொடராக தொடுக்க வேண்டிய தடையின்
பெறுமானம் உயர்வானதாக இருத்தல் வேண்டும்.இவ்வாறு ஒவ்வொரு அளவுகளுக்கும்
தொடுக்க வேண்டிய தடைப் பெறுமானங்கள் விகிதமாக கொடுக்கப்பட்டுள்ளன.
அப்பெறுமானம் KΩ/V என மானியின் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெறுமானம் பல்மானியின் உணர்திறன்  உணர்திறன் எனவும் குறிப்பிடப்படும். உணர்திறன் 20KΩ/V கொண்ட மானியொன்றை 10V முழு அளவிலான திரும்பலைக் காட்டுவதற்கு சரிசெய்த போது அங்கு தொடராக இணைக்க வேண்டிய தடைப் பெறுமானம் 200KΩ ஆகும்.(10*20)
 பல் மானியின் வீச்சுத் தெரிவுசெய் ஆளியை திருபுவனம் மூலம் மின் ஓட்டத்தை
அல்லது மின்னழுத்த வேறுபாட்டை அல்லது கடையை அளவிட முடியும். கீழே உருவில்
பல் மணி ஒன்றை DC அழுத்த வேறுபாட்டு

வீச்சுத் தெரிவுசெய் ஆளியை 100வ பெறுமானதிற்கு சுற்றப்பட்டுள்ளது. எனவே இங்கு வாசிக்கும் அழுத்த வேறுபாடு பெறுமானம் 20V ஆகும்.

 பால்மானியொன்றின் DC அழுத்த வேறுபாட்டை அளத்தல்.
AC மின்னழுத்த வேறுபாட்டை அளத்தல்
 பல்மானி யொன்றின்  AC மின்னழுத்த வேறுபாட்டை அளக்கும் வீச்சாத்திற்கு
 வீச்சு தேரியைச் செலுத்தும் போது (திரும்பும் போது) அசையும் சுருள்
மானியின் முனைகளுக்குக் குறுக்கே இருவாயி ஒன்றினால் அல்லது நான்கினால் ஆன
சீராக்கி ஒன்று பயன்படுத்தப்படும். கீழே உருவில்
பல்மானி யொன்றின் வீச்சு தெரிவுசெய் ஆளியை 100V இற்கு சுழற்றப்பட்டுள்ள விதம் 
 கீழே உருவில் காட்டப்பட்டுள்ளது. அம்மானியின் முகப்பில் மின் அழுத்த வேறுபாடு 30V ஆக வாசிக்கப்படும்.
AC மின்னழுத்த வேறுபாட்டை அளத்தல்.

 

 
 மின்னோட்டத்தை அளவிடல் 
 
 பல்மானி யொன்றினால் DC,AC மின்னோட்ட அளவுகளை அளவிட முடியும்.
மின்னோட்டத்தை அளவிடும்போது, எப்பொழுதும் ஆம்பியர் மானியை மின் பாயும்
திசைக்கு தொடராக இணைத்தல் வேண்டும். அம்பியர் மானியினுடாகப் பாயும்
மின்னோட்டத்திற்கு கூடிய தடையொன்றை காட்டு மாயின் குறிப்பிட்ட துணை
உறுப்பின்னுடாக அல்லது சுற்றினுடாக பாயும் ஓட்டம் குறையும்.  இதனால்
இலட்சிய அம்பியர் மானி ஒன்றின் தடை பூச்சியமா  இருத்தல் வேண்டும்.
காட்டி
முகப்பு டைய அம்பியர் மானியொன்றின் தடை பூச்சியத்தைஅண்மிக்கும். கீழே உருவில்  பல்மானி யொன்றின் வீச்சுத் தெரிவு செய்யும்
ஆளியை 240mA இடத்திற்கு திருப்பப் பட்டுள்ள விதம் காட்டப்  பட்டுள்ளது.
அதன்படி மானியின் காட்டி முகப்பில் வாசிக்கப்படும் அளவு 100A  ஆகும்.

 

அஞ்சலூட்டி

மின்காந்த பயன்படுத்தப்படும் ஒரு சந்தர்ப்பமே அஞ்சலூட்டி ஆகும். இதில் U வடிவ மென்னிரும்பு  அகடாக பயன்படுகின்றது. இது காந்தப்புலம் வெளியேபாயா தவாறு அகடடுக்குள்ளே வைத்துக்கொள்கிறது. U  வடிவ அகடு உள்ளபோது காந்தச் சுற்றை பூரணமாகக்குவதற்காக I வடிவ  மென்னிரும்பு துண்டொன்று பயன்படுத்தப்படுகின்றது. பகுதி I உருக்குவில் துண்டொன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

 

கீழே படத்தில் விளக்கப்பட்டுள்ளது

 

கடத்திக் கம்பிச் சுருளின் இரு அந்தங்களுக்கும தேவையான மின் அழுத்தத்தை வழங்கியதும் சுருள் காந்தத் தன்மையை பெறும். பகுதி I,U வடிவ பகுதியை நோக்கி ஈர்க்கப்பட்டு, காந்தச் சுற்றை பூரண காந்தட் சுற்றை பூரணமாக்கி கொள்ளும். இச் சந்தர்ப்பத்தில் தொடு முனைகள் இரண்டும் ஒன்றை யொன்று தொட்டுக் கொள்வதால் புள்ளிகள்  B,C என்பவற்றுக்கிடையே தொடர்பு உண்டாகும். அதாவது புள்ளி A இல் இருந்து புள்ளி E வரை மின்னோட்டம் பாயும். மின் அழுத்த தொடர்பை நிறுத்தியதும் BC தொடர்பு அறுபட்டு BD தொடர்பு ஏற்படும்.

அஞ்சலூட்டிகள் தொடும் இடங்களின் எண்ணிக்கை, Contact Point அவற்றின் முனைவுகளின் எண்ணிக்கை என்பவற்றுக்கு ஏற்ப பெயரிடப் படுகின்றன.
அவை பின்வருமாறு விளக்கப் பட்டுள்ளத
ஒற்றை முனை – ஒருமுனை திறந்துள்ள அஞ்சலூட்டி

 

1.(SPONO – SINGLE POLE NORMALLY OPEN) OR (SPST-SINGLE POLE SINGLE THROW)
குறியீடு
2.(SPCO – Single pole change over) or (SPDT-Single Pole Double Throw)

 

குறியீடு

3.(DPNO- Double Pole Normally Open) or (DPST- Double Pole Single Throw)

 

குறியீடு

4.(DPCO -Double Pole Change Over) or (DPDT- Double Pole Double

Throw)

 

குறியீடு

ஒலிபெருக்கி

வானொலி அல்லது தொலைக்காட்சி கருவிகளில் மின்சக்தியை ஒலிச் சக்தியாக பரிமாற்றம் செய்யும் உபகரணமாக ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகின்றது. நிலையான காந்தம் கம்பிச்சுருள், உலோக தகடு ,உருளை வடிவ காகித அட்டை என்பனவற்றை பயன்படுத்தி ஒலிபெருக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

 

கீழே படத்தில் ஒலிபெருக்கியின் குறுக்குவெட்டு முகம் தோற்றம் விளக்கப்பட்டுள்ளது.

வட்ட காந்தபுலம் படம் கீழே விளக்கப்பட்டுள்ளது.

நிலையான காந்தமொன்றின் வலையத்தின் மத்தியில் மெல்லிரும்புப் பகுதி யொன்றைத் தொடர்புபடுத்தி வட்டவடிவ காந்தப்புலமொன்று ஆக்கப்பட்டுள்ளது.

வட்டவடிவ காந்தப்புலத்தினுள் சுயாதீனமாக அதிரக் கூடியவாறு கம்பிச்சுருள் வைக்கப்பட்டுள்ளதுடன் கடதாசி  அட்டை உருளைவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருள் வழங்கும் வோல்ற்ளவிற்கேற்ப அச் சுருள் ஏற்படுத்தும் அதிர்வுகளின் அளவு  அமையும். மேற்படி கம்பிச்சுருள் இன் அந்தங்கள் நேர்  , மறை முனைகளுடன் தொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு காந்தப் புலத்தில் மின்னோட்டம் பாயும் கம்பிச்சுருளொன்றை வைக்கும் பொழுது,  இச்சுருள் சுயாதீனமாக அசையும் (அதிரும்) என்பதை இச் செயற்பாட்டின் மூலம் அறியலாம்.

 

அதாவது நிலையான காந்திற்க்கு மின்காந்திற்க்கும் இடையே இடைத் தாக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

மின் மணி (Electric Bell) தொழிற்படுவிதம்

 

மின்காந்தம் பயன்படுத்தப்படும் இன்னொரு சந்தர்ப்பம் மின் மணி ஆகும்.

உருவில் காட்டப்பட்டுள்ள வாறு மின்மானி தயாரித்துக் கொள்வதற்கு. U,I வடிவங்களைக் கொண்ட இரு பகுதிகள் அடங்கிய மென்னிரும்பு அகடாக பயன்படுகின்றது.ஒரே திசையில் சுற்றப்பட்ட தொடர் நிலையில் இணைக்கப்பட்டு U வடிவ மென்னிரும்பு அகட்டில் சுற்றப்பட்டு அதன் இரு முனைகளுடன் பொருத்தப்பட்டிருக்கிறது.
 இச் சுருள்களில் மின்னழுத்த வேறுபாட்டொன்றை பிரயோகிக்கும் பொழுது U வடிவ மென்னிரும்பு  ஓரு அந்தம் வடமுனை வாகவும்  மறு அந்தம் தென்முனைப் வாகவும் தொழிற்படுகின்றன. காந்தச் சுற்றை பூரண படுத்துவதற்காக I வடிவ மென்னிரும்புப் பகுதி விற்சுருள் ஒன்றின் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றது. இச் சுருளுக்கு நேர் மின்னோட்டம் ஒன்றை வழங்கும்போது , சுற்றினூடாக பாய்வதால் மென்னிரும்பு மின்காந்தம் மாக தொழிற்படுகின்றது.
காந்தச் சுற்றை பூரண படுத்துவதற்காக I வடிவ  காந்தத்தின் இரு அங்கங்களிலும் U வடிவ மென்னிரும்பு பகுதியின் இரு  அந்தங்களில் தோன்றியுள்ள முனைவுகளுக்கு எதிரான முனைவுகள் தூண்டப்படுகின்றன. ஒத்த முனைகள் ஒன்றையொன்று கவர்வதால், திருகாணியின் முனையிலிருந்து I பகுதி விலகிப்போகும். இதனால் மின்சுற்று துண்டிக்கப் படுவதால் அதனூடாக பாயும் மின்னோட்டம் தடைப்படும். ஆகவே வடிவ  மென்னிரும்புப் பகுதி ஆரம்ப நிலையை அடையும். இவ்வாறு மீண்டும் மீண்டும் நடைபெறுவதால் மணி ஒலிக்கின்றது.

நிலைமாற்றி

மின் இலத்திரனியல் துறையிலே பல்வேறு சந்தர்ப்பங்களிலே ஒரு மின் சுற்றில் இருந்து இன்னுமோர் மின் சுற்றுலுக்கு மின் கடத்தித் தொடர்புகள் ஏதேனும் இன்றி மின் சக்தியை மாற்றீடு செய்ய வேண்டியேற்படுகின்றது. அதே போன்று பெருமளவிலான சந்தர்ப்பங்களில் நிலைமாற்றி யிலிருந்து வினியோகிக்கும் அழுத்த வேறுபாட்டை விட வேறுபட்ட மின் அழுத்த வேறுபாட்டை வழங்க வேண்டி யேற்படும் ஆடலோட்ட மின்னோட்டம் வினியோகிக்கப்படும் போது இச் செயற்பாட்டை மிக இலகுவாக நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் துணைக்கருவி நிலைமாற்றி ஆகும்.
துணைக் கருவி நிலைமாற்றியாகும்.
நிலைமாற்றி வகைகளையும் அவற்றில் ஏற்படும் இழப்புகள் தொடர்பான விடயங்களையும் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

நிலைமாற்றமொன்றின் கட்டமைப்பு

 காந்தப்புலமொன்றினுள் கம்பிச்சுருளொன்றை வைத்து, இக்காந்த பயத்திலே மாற்றமொன்றே செய்வதால் சுருளிலே மின் இயக்க விசை ஒன்று தூண்டப்படும். அதே போன்று கம்பிச் சுருளினூடே ஆடலோட்ட மின்னோட்டம் ஒன்றை செலுத்தும்போது அக்கம்பியை சுற்றி ஆடலோட்ட மின்னியக்க விசை ஒன்று தூண்டப்படும்.
இத் தத்துவத்தின் அடிப்படையில் மின் இயக்க விசையொன்று பிறப்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணம் நிலைமாற்றி எனப்படும் .
நிலைமாற்றி மூன்று  பிரதான பகுதிகளைக் கொண்டது. அவையாவன
1. முதற்சுருள் (Primary Winding)
2. துணைச் சுருள் (Secondary Winding)
3. அகடு (Cove)

 

நிலை மாற்றியின் பிரதான பகுதிகள்
மின்மாற்றியின் அகடு (Cove) மெல்லிய இரும்புத் தகட்டினால் ஆக்கப்பட்டு இருப்பதால் அதன் செயல்பாட்டு திறன் அதிகமாக இருக்கும் இங்கு மெல்லிய தகடுகள் ஒன்றுக்கொன்று காவல் இடப்பட்டுள்ளன.
முதற் சுருளுக்கு கிடைக்கும் ஆடலோட்ட மின்னோட்டம் மீடிறன்களுக்கேற்றப மின் அகடாக பாவிக்கப்படும் மூலப் பொருள் Core Material எதுவென்று தீர்மானிக்கப்படும். இதற்கேற்ப வாயு அகடு Ferrite Core  போன்ற அகடுகள்
 உள்ள நிலை மாற்றிகள் உயர் மீடிறன் சுற்றுகளில் பயன்படுத்தப் படுகின்றன இதேபோன்று இரும்பு  அகடு Iron Core உள்ள நிலைமாற்றிகள் தாழ் மீடிறன் மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
கீழே உருவில் அகடுகள் தொடர்பான குறியீடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
நிலைமாற்றியின் அகனி
1: Gas Core
2: Fer rite Core
3: Iron Core
பைபர் , பிளாஸ்டிக் போன்ற காவல் இடப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்ட வடிகட்டையின் Bobbin மீது செப்பு அல்லது அலுமினியச் சுற்றுக் கம்பியினால் Winding Wire முதற் சுருளும் , துணை சுருளும் சுற்றப்பட்டுள்ளன. கீழே உருவில் காட்டப்பட்டுள்ளது. சுற்றப்பட்டுள்ள முறுப்புகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப பெய்ப்பு-பயப்பு மின் அழுத்த வேறுபாடுகள் வித்தியாசப்படும். முதற் சுளுக்கு வழங்கப்படும் மின் அழுத்த வேறுபாட்டை விடக் கூடிய மின் அழுத்த வேறுபாட்டை துணைப் சுருள்களின் மூலம் பெறப்படுமாயின் அது படி கூட்டு நிலைமாற்றி எனப்படும். முதற் சுருளுக்கு வழங்கப்படும் மின்னழுத்த வேறுபாட்டை விட குறைவாக மின் அழுத்த வேறுபாட்டை துணைச் சுருளிலிருந்து பெறப் படுமாயின் அது படி குறை நிலைமாற்றி  Step Down Transformer எனப்படும்.
நிலை மாற்றியில் சுற்றப்பட்டுள்ள முறுக்குகளின் (சுற்றுக்கள்) விகிதத்திற்கும் மின்னழுத்த வேறுபாட்டு வித்தியாசத்திற்கும் பாயும் மின்னோட்டத்திற்கும் இடையேயான தொடர்பை கீழே உருவில் விளக்கப்பட்டுள்ளது.

அழுத்த வேறுபாட்டு விகிதத்தைக் காட்டுதல்.

 Np என்பது முதற் சுருளில் சுற்றியுள்ள முறுக்களின் (சுற்றுக்கள்) எண்ணிக்கை யாகும். முதற் சுருளின் மின் அழுத்த வேறுபாடு Vp ஆகும். துணைச் சுருளில் உள்ள முறுக்குகளின் எண்ணிக்கை “Ns”ஆகும். துணை சுருளினாள் தூண்டப்படும் தூண்டல் மின்னியக்க விசை “Vs” ஆகும். முதல் சுருளுடன் இணைக்கப்பட்டுள்ள வழங்கள் மின் அழுத்த வேறுபாடு காரணமாக முதற் சுருளினுடாக ஆடல் மின்னோட்டம் பாய்கிறது. இந்த மின்னோட்டம் மூலம் ஆடலோட்ட காந்தப்பாயமொன்று மின் அகட்டினுள் பிறப்பிக்கப்படுகிறது. முதற் சுருளின் மூலம் பிறப்பிக்கப்படும் காந்தப்பாயம் முழுவதும் துணை சுருளுடன் தொடர்புபடுமாயின் துணைச் சுருளில் “Vs” எனும் மின் இயக்க விசையொன்று தூண்டப்படும். இச்சந்தர்ப்பத்தில் முதற் சுருளின் ஒரு முறுக்கினால் தூண்டப்படும் மின்னியக்க விசை துணை சுருளின் ஒரு முறுக்கினால். தூண்டப்படும் மின் இயக்க விசைக்கு சமனாகும்.
முதற் சுருளின்     Np * ஒருமுறுக்கினாள்
தூண்டப்படும்   = தூண்டப்படும்  மொத்த மின் மின்னியக்க விசை
இயக்க விசை
செயல்முறையில் முதற் சுருளில் தூண்டப்படும் மின் இயக்க விசை வழங்கள் மின் அழுத்த வேறுபாட்டிற்கு அண்ணளவாக சமனாக இருப்பதுடன் மின்னோட்டத் திசைக்கு எதிராய் இருக்கும்.

கீழே உருவில் நிலைமாற்றியொன்றின் துணைச் சுருள் Vs சுமையுடன் இணைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பமாகும்.

மின்னோட்ட விகிதத்தை காட்டுதல்

இச்சந்தர்ப்பத்தில் துணைச் சுருளில் பாயும் மின்னோட்டம் Is ஆவதுடன் முதற் சுருளில் பாயும் மின்னோட்டம் Ip ஆகும். நிலைமாற்றியிலே எவ்வித சக்தி இழப்பும் ஏற்படுவதில்லை எனக் கொண்டால் முதற் சுருளுக்கு வழங்கப்படும் மின்சக்தி முழுவதும் துணை சுருளுடன் இணைக்கப்பட்டுள்ள சுற்றுக்கு மாற்றப்படும் . இந்நிலையில் மாற்றி சக்தி இழப்பின்றி இயங்குகின்ற சந்தர்ப்பங்களிலை இலட்சிய நிலைமாற்றி Ideal Transformer என அழைக்கப்படும். அவ்வாறாக அமையும்போது
 நடைமுறையில் நிலைமாற்றிகளில்  இலட்சிய நிலை என்ற உயர்வாக நிலை ஒன்று கிடையாது. நிலைமாற்றி ஒன்று செயல்படும் போது முதற்  சுருளுக்கு வழங்கப்படும் சக்தி முழுவதும் துணைச் சுருளுக்கு  கடத்தப்படுவதில்லை. இதில் குறிப்பிட்ட கூடிய அளவு சக்தி நிலைமாற்றி இழப்பாக விரயமாகும்.
Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »