தரவு தொடர்பாடல் வகைகளும் அதன் பயன்படும்

network, internet, connection

தரவு தொடர்பாடல்

தரவு அல்லது தகவல் அனுப்புனரிடமிருந்து பெருனருக்கு
கடத்தப்படல் தரவு தொடர்பாடல் எனப்படும்.
தரவு தொடர்பாடல் முறைமையின் கூறுகள்
 • தகவல் அல்லது தரவு: தொடர்பாடலுக்கு உட்படுத்தவேண்டிய விடயம். இலக்கம்> பாடம்> நிழற்படங்கள் போன்றவையாக இருக்கலாம்.
 • அனுப்புனர்: தரவு தகவலை அனுப்பும் நபர் அல்லது முறைமை
 • ஊடகம் :  அனுப்புனரையும் பெறுனரையும் இணைக்கும் தொலைதொடர்பு ஊடகம்.
 • பெறுனர் : தரவு தகவலை பெறும் நபர் அல்லது முறைமை
 • நெறிமுறை: தரவுகளை உபகரணங்களுடன் பரிமாறுவதந்கு கொள்கைகளை கொண்டிருக்கும். நெறிமுறையில்லாம் உபகரணங்கள் தரவு தொடர்பாடலுக்கு உட்படமுடியாது.
 • ஒத்திசைவற்றபரிமாற்றம் : இத்தொடர்பாடலை உருவாக்குவது எளிது மற்றும் செலவூ குறைவு. இது சீறியல் துறைகளிலும் டயல் அப் இணைப்புகளில் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு எழுத்துக்கும்தொடக்க முடிவு பீட்கள் பயன்படுத்த ப்படுகின்றது.உதாரணமாக ஒரு பைட் தரவை அனுப்ப 1 தொடக்க பீட்டும் மற்றும் 2 முடிவு பீட்கள் பயன்படுத்தப் படுகின்றது. இதன் வேகம் 56kbp ஆகும்.
 • ஒத்திசைவூ பரிமாற்றம்:  இத்தொடர்பாடல் வினைத்திறன் மிக்க வேகமான சிக்கலான மற்றும் செலவூ அதிகமாக ஒரு தொடர்பாடலாகும். இது 64kbits தரவை அனுப்ப 4 பைட் தரவு தேவைப்படுகின்றது. அதாவது 3 தொடக்க பைட் மற்றும் 1 Kb பைட் இதன் வேகம் 100Mbps ஆகும்.ஒப்புகை (Acknowledgement)

தரவுகள் தொடர்பாடலில் ஒரு குறித்த கணினி தரவூகளை தகவல்களை பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் செயற்பாடு ஓப்புகை எனப்படும். இதற்காக ACK பக்கேற்றுகள் TCP வலையமைப்பில் பயன்படுத்தப்படுகின்றது.

சமிக்ஞை

ஒரு சமிக்ஞை என்பது ஒரு குறியீட்டு செய்தியாகும். ஒரு செய்தி அனுப்புனரினால் சமிக்ஞை குறியாக்கப்பட்டு அனுப்பபடும். பெறுனரிடம் மறுபடியூம் சமிக்ஞை செய்தியாக குறியாக்கப்படும்.

அனலாக் பரிமாற்றம்

அனலாக் சமிக்ஞைகளை பயன்படுத்தி தரவு தகவல்களை பரிமாற்றம் செய்தல் அனலாக் மரிமாற்றம். இத்தொடர்ச்சியமான சமிக்ஞைகளை Amplitude , phase, Frequency போன்ற அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வேறுப்பட்ட சமிக்ஞைகளை உருவாக்கலாம்.

டிஜிட்டல் பரிமாற்றம்

டிஜிட்டல் சமிக்ஞைகளை பயன்படுத்தி தரவு தகவல்களை பரிமாற்றம் செய்தல் டிஜிட்டல் மரிமாற்றம்.

இலத்திரனியல் மற்றும் கணினி முறைகள்

வானொலி (Radio)

மின்காந்த சமிக்ஞைகளை பயன்படுத்தி நீண்ட தூரத்திற்கு தரவுகளை தகவல்களை பரிமாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும். வானொலி சமிக்ஞைகளை அனுப்பு உபகரணம் டிரான்ஸ்மிட்டர்களாகும். பெறும் உபகரணங்கள் ரீசிவர்களாகும். இவ்விரண்டு தொழில்களை அற்றும் உபகரணம் டிரான்ஸ் சீவராகும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரீசிவர்கள் வானொலி சமிக்ஞைகளை பெறுவது ஒலிபரப்பு Broad Cost  எனப்படும்.

செய்மதி

பூமியின் சுழற்சி வேகத்தில் பூமிக்குச் சுற்றிலும் ஒரு புவி சுற்றுவட்ட பாதையில் செய்மதிகள் (செயற்கைகோள்) பயனிக்கிறது. எனவே தரையிலிருந்து பார்க்கும் போது நகருவதாக தெரிவதில்லை. இது சுமார்  35786 Km தூரத்தில் இருக்கிறது.
 
மனிதனால உருவாக்கப்பட்ட செயற்கைகோள்களை ஆறு முக்கிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
 • அறிவியல் கண்காணிப்பு
 • வானிலை
 • தொடர்பாடல்
 • ஊடுருவல்
 • ராணுவம்

Integrated Services Digital Network (ISDN)

பாரம்பரிய தொலைபேசி சுற்றுகள் மீது குரல்> வீடியொ > தரவு மற்றும் பிற வலையமைப்பு சேவைகளை பரிமாற்றும் தொடர்பாடல் தரங்களின் தொகுப்பு ஆகும். இது 1988 CCITT Red book   இல் எழுதப்பட்டது .  ISDN  இன் முக்கிய அம்சமாக பேச்சு மற்றும் தரவுகளை ஒரே வழியில் ஒருங்கிணை க்கிறது.

Asymmetric Digital Subscriber Line (ADSL)

இத்தொழிநுட்பமானது அதிவேகமாக செப்பு இணைப்புகளில் தரவுகளை பரிமாற்றம் செய்ய உதவுகிறது. மற்றும் குரல் பரிமாற்றங்களையும் அதே இணைப்பில் பரிமாற்றக்கூடியதாக உள்ளது.
ADSL சேவை மற்றும் குரல் அழைப்புகளை ஒரே இணைப்பில் பயன்படுத்த அல்லது DSL filter பயன்படுத்தப் படுகின்றது.
ADSL ஆனது மத்திய அலுவலகத்திலிருந்து 4 தொடக்கம் 8 கிலோமீட்டர் வரையிலான குறுகிய தொலைவில் மட்டுமே வழங்கப்படும்.

General packet radio service (GPRS)

இச்சேவையானது 2G மற்றும் 3G தொலைபேசி வலையமைப்பில் தரவு ச்சேவையை வழங்குகின்றது. இச்சேவை 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயனர்களுக்கு கிடைக்கிறது.முன்னர் CDPD  மற்றும் i-Mode  போன்றதொழிநுட்பங்களுக்கு பதிலாக GPRS ஐரோப்பிய
தொலை தொடர்பு நியமங்கள் நிறுவனம் (ETSI) மூலமாக தரப்படுத்த ப்பட்டது.

GSM

இரண்டாம் தலைமுறை டிஜிட்டல் செல்லுலார் நெட்வொர்க்கு களுக்கு தொழில்நுட்பங்களை விவரிக்க ஐரோப்பிய தொலை தொடர்பு தரநிலைகள் நிறுவனம் (ETSI) உருவாக்கிய ஒரு தர நிலை களின் தொகுப்பாகும். GMSதரநிலை முதலாம் தலைமுறை அனலாக் செல்லுலார் வலையமைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது.

 

Enhanced Data Rates for GSM Evolution (EDGE)

Enhanced Data rates for GSM Evolution (EDGE) (Enhanced GPRS (EGPRS), or IMT Single Carrier (IMT-SC), or Enhanced Data rates for Global Evolution) ஆனது ஒரு டிஜிட்டல் மொபைல் போன் தொழில்நுட்பமாகும். இத்தொழிநுட்பமானது GPRS உடன் ஒப்பிடும் போது மேம்பட்ட தரவூ பரிமாற்ற வேகத்தை
அனுமதிக்கின்றது.

High-Speed Downlink Packet Access (HSDPA)

மூன்றாம் தலைமுறை மொபைல் மொபைல் போன்
தொடர்பாடல் நெறிமுறையாகும். இது 3.5G> 3G+ அல்லது டர்போ 3G எனவும் அழைக்கப் படுகின்றது. இத்தொழிநுட்பம் அதிக தரவு பரிமாற்ற வேகத்திறன் கொண்டது. தற்போது 1.8,3.4,7.2, 14.4 mb/s போன்ற வேகங்களை அனுமதிக்கின்றது. மற்றும்   HSPA+  ஆனது 42mb/s,84mb/s போன்ற வேகங்களை அனுமதிக்கின்றது.

 

முதலாம் தலைமுறை வலையமைப்பு

1980 களில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டாம் தலைமுறை
வலையமைப்பு அறிமுகப்படுத்தும் வரை இவை அமுலாக்க ப்பட்டிருந்தது. இது அனலோக் தொழிநுட்பமாகும். 1G க்கும் 2Gக்கும் இடையிலான முக்கிய வேறுபாடாக 1G அனலாக் தொழிநுட்ப த்தையூம் 2G டிஜிட்டல் தொழிநுட்பத்தையூம் பயன்படுத்தியதாகும்.

 

இரண்டாம் தலைமுறை வலையமைப்பு

இரண்டாம் தலைமுறை வலையமைப்பு ஒரு கம்பியற்ற
தொழிநுட்பமாகும். இந்த செல்லுலார் டெலிகாம் வலையமைப்புகள் வணிக ரிதியாக 1991 இல் ஃபின்லாந்தில் GSM தரநிலையில் தொடங்கப்பட்டது. SMS செய்திகளை தொடங்கிஇ மொபைலுக்கான தரவு சேவைகளை 2G அறிமுகப்படுத்தியது.

மூன்றாம் தலைமுறை வலையமைப்பு

மூன்றாம் தலைமுறை வலையமைப்பு அதி வேகமான இணைய இணைப்புகளை கொண்டதாக அமைந்தது. பின்வரும் புதிய அம்சங்களை கொண்டதாக காணப்பட்டது.
Wide-Area Wireless Voice Telephonemobile Internet access, video calls and mobile TV, all in a mobile environment.

4G

நான்காம் தலைமுறை வலையமைப்பு அதி வேகமான அதாவது
100Mb/s இணைய இணைப்புகளை கொண்டதாக அமைந்தது. இது 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2009 ஆம் ஆண்டு சந்தைக்கு விடப்பட்டது. இது Long term evolution (LTE) எனும் தொழிநுட்பத்தை பயன்படுத்துகிறது.

கேரியர் சிக்னல்

ஒரு கேரியர் சிக்னல் என்பது ஒரு பரிமாற்ற மின்காந்த துடிப்பு அல்லது அலை ஆகும். இத்தகவல் பரிமாற்றம் சிக்னலின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் அடிப்படை அலைவரிசையை மாற்றம் செய்யவதன் மூலமும் மற்றும் கட்டங்களில் மாற்றங்கள் செய்வதன் மூலமும் மாறுபடும். இந்த மாறுபாடு பண்பேற்றம் எனப்படும்.

 பண்பேற்றம் Modulation

ஒரு மின்னணு அல்லது ஆப்டிகல் சிக்னல் கேரியருக்கு தகவல்களை கூடுதலாக இணைத்தல் அல்லது மாற்றங்கள் செய்தல் பண்பேற்றம் எனப்படும்.

அடிப்படை பண்பேற்ற நுட்பங்கள்.

பண்பேற்றம்
அனலாக் பண்பேற்றம்
 • அனலாக் சமிக்ஞைக்கு பயன்படுத்தப்படும் பண்பேற்றம் அனலாக் பண்பேற்றம் எனப்படும்.

பொருள் உறவு முறை மாதிரி (OBJECT ORIENTED MODEL)

இது object orientation உடனான
சிக்கலான தரவு வகை யாறாக்களுடன் கூடிய தரவுத்த ளங்களை வழங்குகின்றது. இதன் போது தரவுத்தள முகாமை த்துவத்திற்கு python, java, VB போன் ற OOP மொழி பயன்படுத்த படபடும். மேலும் இவை ஏனைய மாதிரிகளால் வெற்றி கொள்ள முடியாத கணனி சார் வரைதல் (CAD), புவியியல் தகவல் முறைமை(GIS), பல்லூடக தரவுத்தள மாதிரி (multimedia DB model) போன்றவற்றை வெற்றி கொள்ள இம் மாதிரி பயன் படுத்தப்படும்.

 

வலைப்பின்னல் மாதிரி (NETWORK DATA BASE MODEL)

இதில் ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட பெற்றோரை கொண்டிருக்க முடியும். இவை Sets களாக உருவாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு Set உம் உரிமையாளர் பதிவும் மற்றும் அங்கத்துவ பதி வைக்கொண்டிருக்கும். ஒரு அங்கத்துவப்பதிவானது பல உரிமை யாளர்களை கொண்டிருக்கும்.
நன்மை
-Conceptual Simplicity
-அதிகமான உறவு முறை (Relation ship) வகைகளை கையாளும்.
-தரவினை அடைந்து கொள்வது இலகுவானது.

-தரவு சுதந்திரமானது.
தீமை
-சிக்கலான முறைமை.
-கட்டமைப்பு சுதந்திரம் குறைவு.

ACID MODEL

SCID மாதிரியானது தரவுத்தள கோட்பாட்டின் பழமையான மற்றும் மிகமுக்கியமான கருத்தாகும். இம்மாதிரியான நான்கு இலக்கு களை கொண்டதாக அமைகின்றது. Atomicity, Consistency, Isolation and Durability. இந்த நான்கு இலக்குகளை எந்த விதத்திலும் சந்திக்கத் தவறிய தரவூத்தளங்கள் நம்பகமானவை அல்ல.

 

ATOMICITY (அணு நுண் இக்கட்டுகள்)

இவ்விதியானது தரவு தள மாற்றங்கள் “அனைத்தும் அல்லது ஒன்றும் இல்லை” என்ற விதிக்கு அமைவாக நடைபெறுகின்றது. பரிவத்தனையின் ஒரு பகுதி தவறினால் மொத்த பரிவத்த னையும் தோல்வியும்.

CONSISTENCY

தரவுத்தளத்தில் செல்லுபடியாகும் தரவுகளை மட்டுமே எழுதப்பட வேண்டும் என்பதில் உறுதியா இருக்கும் ஒரு பகுதியாகும். சில காரணங்களுக்காக தரவுத்தளத்தின் நிலைத்தன்மையின் விதிகளை மீறுவதாக ஒரு பரிவர்த்தனை நிறைவேற்றப்பட்டால்  முழு பரிவர்த்தனைகளும் திரும்பப் பெறப்படும் மற்றும் அந்த விதிமுறைகளுக்கு இசைவாக தரவுத்தளத்தை  மீட்டெடுக்கப்படும்.

ISOLATION

ஒரே நேரத்தில் நிகழும் பல பரிமாற்றங்களினால் தரவு தளத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக அத்தரவு தளம் தனிமைப் படுத்த வேண்டும். உதாரணமாக இருவர் ஒரே தரவு தளத்தில் ஒரே நேரத்தில் பரிவர்த்தனைகளை செய்யூம் போது அவர்களது பரிவர்த்தனைகள் தனிமைப்படுத்த வேண்டும். அதாவது ஒரு பரிவர்த்தனை நடந்து முடிந்த பிறகு அடுத்த பரிவர்த்தனை நடைபெற வேண்டும். இதன் மூலம் சில தரவுத்தள பாதிப்புக்களை தவிர்க்க முடியும்.

DURABILITY

நிலைப்புத்தன்மை தரவுத்தளத்தில் உறுதிப்படுத்தப்பட்ட எந்த பரிவர்த்தனையும் இழக்கப்படாது என்பதை உறுதிப்படுத்து கின்றது. இவ்வூறுதிப்பாடானது தரவுத்தள காப்பு மற்றும் பரிவர்த்தனை பதிவூகளின் பயன்பாட்டின் மூலம் மென்பொருள் அல்லது வன்பொருள் தோல்வியை சந்தித்தாலும் தரவுகள் இழக்கப்படாமையை உறுதிச்செய்கின்றது.

UNIQUE KEY

ஒரு தொடர்புடைமை தரவுதளத்தில் Unique Key அனது ஒவ்வொரு அட்டவணையில் உள்ள தரவுகளை தனித்துவமாக அடையாளம் காண பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட Column களால் ஒரு Unique Key உருவாக்கப்படலாம்.

COLUMN

ஒரு தொடர்புடைய தரவுத்தள அட்டவணையின் பின்னணியில் ஒரு நெடுவரிசையில் ஒரு குறிப்பிட்ட எளிய வகை தரவூ மதிப்புகளின் தொகுப்பாகும்.

பதிவுகள்  நிரைகள் (Tuple)

ஒரு வரிசையானது ஒரு பதிவு அல்லது வரிசை எனவும் அழைக்கப்படுகின்றது. எளிமையான வகையில்இ ஒரு தரவுத்தள அட்டவ ணையை வரிசைகள் மற்றும் நெடுவரிசைகள் அல்லது புலங்கள் கொண்டதாக கருதலாம். ஒரு அட்டவணையில் உள்ள ஒவ்வொரு வரிசையும் தொடர்புடைய தரவூகளின் தொகுப்பைக் குறிக்கின்றன மற்றும் அட்டவணையில் உள்ள ஒவ்வொரு வரிசைக்கும் ஒரே அமை ப்பு உள்ளது.

TABLE

ஒரு அட்டவணை என்பது செங்குத்து நெடுவரிசைகளின் (Column) மாதிரி மற்றும் கிடைமட்ட வரிசைகளைப் (Raw) பயன்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு தொகுப்பாகும். அட்டவணையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நெடுவரிசைகளைக் கொண்டி ருக்கலாம் ஆனால் நிரைகள் எவ்வளவும் இருக்கலாம்.

SUPERKEY

ஒரு அட்டவணையில் உள்ள வரிசைகளை தனித்துவமாக அடையாளங்காண பயன்படுத்தப்படும் நெடுவரிசைகளின் தொகுப்பாகும். ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசைகளை பயன்படுத்தி  உருவாக்கப்படும்.
 
உதாரணமாக பின்வரும் அட்டவணையை கருதுக. Exmples
 • employeeID, name, job, and departmentID
 • Examples of super keys in this table would be
 • {employeeID, Name},{employeeID, Name, job}, and {employeeID, Name, job,departmentID}

வேட்பாளர் சாவி (Candidte Key)

வேட்பாளர் சாவி என்பது ஒரு தரவூத்தள அட்டவணையில் உள்ள தரவுகளை தனித்துவமாக அடையாளங்காண பயன்படுத்தக்கூடிய பண்பு அல்லது பண்புகளின் கலவையாகும். ஒரு அட்டவனையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர் சாவிகள்
காணப்படலாம். இவ்வேட்பாளர் சாவிகளில் ஒன்று அட்டவனையின் முதன்மை சாவியாக தேர்ந்தெடுக்கபடும்.

முதன்மை சாவி (Primary key)

முதன்மை சாவி என்பது ஒரு தரவூத்தள அட்டவணையில் உள்ள தரவூகளை தனித்துவமாக அடையாளங்காண பயன்படுத்தக்கூடிய சாவியாகும்.
உதாரணமாக
(Driver License Number, Telephone Number (including area code), or Vehicle Identification Number) ஆகியவற்றை கூறிப்பிடலாம்.

அந்நிய சாவி

அந்நிய சாவி என்பது ஒரு அட்டவனையில் உள்ள முதன்மை சாவி இன்னொரு அட்டவனையில் உள்ள தரவூகளை தனித்துவமாக அடையாளங் காண பயன்படுமாயின் அச்சாவி அவ்வட்டவணைக்கு அது அந்நிய சாவி எனப்படும். ஒரு முதன்மைசாவி பல அட்டவணை களுக்கு அந்நிய சாவியாக பயன்படலாம்.

மாற்று சாவி

ஒரு அட்டவணையில் முதன்மை சாவியாக ஒரு சாவி தேர் தேடுக்கப்பட்ட பிறகு மிகுதியாக அவ்வட்டவணையில் உள்ள சாவி களை மாற்று சாவி எனக் குறிப்பிடலாம்.

உறவுகளின் வகைகள்

 

ஒரு உறவூ என்பது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அட்டவணயில் நெடுவவரிசைகள் இடையே நிறுவப்படும் ஒரு கூட்டு ஆகும்.

 1. உறவூகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.
 • ஒன்றுக்கு ஒன்றுக்கு (One to One)
ஒரு அட்டவணையில் ஒரு பதிவு மற்றொரு அட்டவணையின் பதிவோடு மட்டும் தொடர்புக்கொள்ளும் உறவு ஒன்றுக்கு ஒன்று என அழைக்கப்படும்.
 • ஒன்றுக்கு பலவான (One To Many)
ஒரு அட்டவணையில் ஒரு பதிவு மற்றொரு அட்டவணையின் பலபதிவோடு தொடர்புக்கொள்ளும் உறவு ஒன்றுக்கு பலவான என அழைக்கப்படும்.
 • பலவுக்கு பல (Many To Many)
ஒரு அட்டவணையில் ஒரு பதிவு மற்றொரு அட்டவணையின் பல பதிவோடும் மற்றைய அட்டவணையின் ஒரு பதிவு இவ் வட்டவணையின் பல பதிவோடு தொடர்புக்கொள்ளும் உறவு பலவூக்கு பல என அழைக்கப்படும்.

மூலத்தரவு

எந்நவிதமான நிரற்படுத்தலுக்கும் உட்படுத்தாத எண்கள் எழுத்துக்கள் பாடங்கள் போன்றவற்றை மூலத்தரவு எனக் குறிப்பிடலாம்.

மீத்தரவு

மீத்தரவு என்பது ஒரு தரவைப் பற்றிய தரவூ ஆகும். தரவு வரையறை மற்றும் கட்டமைப்பு தரவுக் கோப்புகளை நிர்வகித்தல் போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.
 • தரவு உருவாக்கத்தின் உட்கருத்து
 • தரவு நோக்கம்
 • உருவாக்கிய நேரம் மற்றும் திகதி
 • தரவை உருவாக்கியவர்
 • தரவு உருவாக்கப்பட்ட கணினி
 • பயன்படுத்தப்படும் நியமங்கள்
Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »