வீட்டு மின் சுற்றி பரிபாலிக்கும் உபகரணங்கள்

வீட்டு மின் சுற்றிற்கு மின்னை வழங்கும் பலகையுடன் தொடர்புபடுத்தவும்

துண்டிக்கவும் பயன்படுத்தும் பிரதான ஆளிபற்றி இங்கு அறிந்து கொள்ள முடியும். இதற்கு மேலாக வீட்டு மின்சுற்றில் பயன் படுத்தும் பல்வேறு பரிபாலிக்கும் முறை பற்றியும் இங்கு விபரிக்கப்படும்.

பல்வேறு பரிபாலிக்கும் உபகரண வகைகள்

  1. தலைமை/பிரதான ஆளி Main Switch
  2. ஒரு வழி ஆளி One way Switch
  3. இருவழி ஆளி Two way Switch
  4. பல்வழி ஆளி Intermediate Switch
  5. ஆழுத்தும் ஆளி Bell push Button

தலைமை ஆளி Main Switch

வீட்டு மின்சுற்றிற்குப் பிரதான மின்வடங் களில் இருந்து மின்னை தலைமை ஆளியின் மூலம் தொடர்புபடுத்தவும் துண்டிக்கவும் முடியும். கிலோ உவாற்று மணி மானியி லிருந்துவீட்டிற்கு மின்னை வழங்கும் போது முதலாவதாக பிரதான ஆளியடன் தொடர்பபடுத்தப்படும். அதன் பின்னர் புவிப்பொசிவு தடக்கு ஆளியுடன் தொடர்புபடுத்தப்படும். இப்பிரதான ஆளியினுள்ளே உயிர்க்கடத் தியுடன் தொடர்புடைய உருகியொன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உருவில் கிலோ உவோற்றுமணி மானியிலிருந்து வரும் மின் பிரதான

ஆளியினூடாகப் புவிப்பொசிவு (தடக்கு ஆளி) சுற்றுடைப்பானுடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ள விதம் பற்றி காட்டப்பட்டுள்ளது.


ஒரு வழி ஆளி One way Switch

மின்விளக்கு ஒன்றை ஒரு இடத்திலிருந்து மாத்திரம் கட்டுப்படுத்தும் சந்தர்ப்பங்களில் (விளக்கை ஒளிரச் (விளக்கை ஒளிரச் செய்யவும்
அணைக்கவும்) ஒரு வழி ஆளி பயன்படுத்தப்படும்.
உருவிலே ஒரு வழி ஆளி யொன்றினால் மின் விளக்கொன்றை
கட்டுப்படுத்தும் விதத்தைக் காட்டும்சுற்று வரிப்படம் காட்டப்பட்டுள்ளது.

இரு வழி ஆளி Two way Switch

மின்விளக்கொன்றை இரு தானங்களிலிருந்து கட்டுப்படுத்துவதற்காக இரு வழி ஆளி பயன்படுத்தப்படும். உருவில் இருவழி ஆளிகளிரண்டினால் ஒரு மின் விளக்கைக் கட்டுப் படுத்துவதற்கு பயன்படுத்தும் சுற்று வரிப்படம் காட்டப் பட்டுள்ளது.இவ்வாறான சுற்று மாடிப்படிகளின்கீழிருந்தும் மேலிருந்தும்
மின் விளக்கொன்றை இயக்குவதற்காகப் பயன்படுத்தப்படும்.

பல்வழி ஆளி Intermediate Switch

இவ்வாளியானது இருதானங்களுக்குக்கூடுதலான இடங்களிலிருந்து ஒரு மின்
விளக்கைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவை யேற்படும்போது பயன்படுத்தப்படும். உருவில் இரு வழி ஆளிகள்இரண்டினையும் பல்வழி (Intermediate Switch) ஆளியொன்றையும் பயன்படுத்தி மூன்று
இடங்களில் இருந்து மின் விளக்கொன்றைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் சுற்றுரிப்படம் காட்டப்பட்டுள்ளது.

அழுத்தும் பொத்தான் Bell push Button

வீட்டு மின்சுற்றுகளில் மின்மணியைக் கட்டுப்படுத்துவதற்காக அழுத்தும் பொத்தான் பயன்படுத்தப்படும். அழுத்தும் பொத்தான் ஒன்றின் மூலம்
மின் மணியொன்றைக் கட்டுப்படுத்தும் சுற்று ஒன்று உருவில் காட்டப் பட்டுள்ளது.

புவிப்பொசிவு மின்னோட்டம் 
வீட்டு மின்சுற்று மின் இணைப்பை வழங்கல் பற்றியும் அதில் பயன்படுத்தும் பாதுகாப்பு முறைகள் பற்றியும் க இங்கு அறிந்து கொள்ள முடியும். வீட்டு மின் சுற்றுக்களிலே பயன்படுத்தப்படும் உபகரணங்கள், கம்பி வகைகள், என்பவற்றைப் பற்றியும் இங்கு விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் வழங்குதல்

தேசிய மின்வலு உற்பத்தி நிலையத்திலிருந்து மின் வழங்கள்  வடங்களினூடாக வீட்டு மின் சுற்றுவரை மின் வழங்கப்படும் முறை பற்றி இங்கு நீங்கள் கற்கலாம்.
மேலும் இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படும் சேவை உருகி, கிலோ உவாற்று மணிமானி பற்றியும் விபரிக்கப்படும்.

வீடொன்றிற்கு மின் வழங்கல்

மின்சார சபை  மூலம் வீடுகளுக்கு single phase ஒற்றை அவத்தையாயின் 230V ஆகவும் மூன்று அவத்தையாயின் Three phase 400V ஆகவும்  மின் வழங்கப்படும். மின் சுற்றுக்குத் தேவைப்படும்
சக்தியின் அளவுக்கு ஏற்ப வழங்கல் ஒன்றை அவத்தையா அல்லது மூ அவத்தையா எனத் தீர்மானிக்கப்படும். மின்சார சபை  யினால் சேவை இணைப்புக் கம்பி (service cable)  மூலம் பாவனையாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
இவ்விணைப்பானது சேவை உருகி (service fuse) யினூடாக கிலோ உவாற்று மணிமானி (K.w.h meter)  மூலம் பாவனையாளரின் பிரதான ஆகி (Main switch) யிற்கு தொடர்புபடுத்தப்படும். சேவை உருகி யும் கிலோ உவாற்று-மணி மானியும் மின்சார சபையினால் பராமரிக்கப்படும். பாவனையாளர்கள் இவ்விரண்டையும் கையாளுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சேவை இணைப்புக் கம்பி லிருந்து பிரதான ஆகி வரையும் மின் வழங்கப்படும் முறை கீழே உள்ள உருவில் காட்டப்பட்டுள்ளது.
1.சேவை உருகி
2.கிலோ உவாற்று-மணிமானி
3.பிரதான ஆளி

சேவை உருகி(Main Fuse)

பாவனையாளர்களின் மின்சுற்றிற்கு வழங்கப்படும் தேவையான மின் ஓட்டத்தின் அளவை விடக் கூடிய மின் ஓட்டத்தினால் ஏற்படும் தேசமானது சேவை உருகி மூலம் தவிர்க்கப்படும்.

கிலோ உவாற்று_ மணி மானி (Kwh Meter)

கிலோ உவாற்று மணி மானி மூலம் பாவனையாளர் பயன்படுத்தும் மின் சக்தியின் அளவு கணிக்கப்படும்.1000 உவாற்று (1 Kw) அல்லது ஒரு கிலோ உவாற்று மின் சக்தி ஒரு மணி நேரத்திற்குப் பயன்படுத்த ப்படின் மானியில் அது ஒரு அலகு(1Unit) என குறிப்பிடப்படும்.
கிலோ உவாற்று மணி மானியானது காந்தகச் சுற்றுகள் இரண்டினால் செயல்படுகிறது. அதாவது சுமைக்கு ஏற்ப பாயும் மின்னோட்டம், வழங்கப்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்கு ஏற்ப செயற்படும் காந்தச் சுற்று ஆகிய இரண்டின் மூலமுமாகும்.
இந்தக் காந்தச்சுற்றுகள் இரண்டின் மூலம் பயன்படுத்தப்படும் மின் சக்தியின் அளவிற்கு அமைய அச்சு ஒன்றின் மீது உள்ள அலுமினிய தட்டானது சுழலும். இத்தட்டானது ஒரு அலகு நேரத்தில் சுழலும் சுற்றுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியின் அளவு குறிப்பிடப்படும். உற்பத்தித் தரத்திற்கேற்ப ஒவ்வொரு மானியிலும் ஒரு அலகிற்கு தட்டானது  சுழலும் சுற்றுக்களின் எண்ணிக்கையானது வேறுபடும். இது கிலோ உவாற்று மணிமானிகளின்rev/kwh என குறிப்பிட பட்டுள்ளது.
உதாரணமாக 320rev/Kwh எனக் குறிப்பிடப்பட்டுள்ள மானியொன்றிலே வாசிப்பு ஒரு அலகைக் காட்டுவதற்கு தட்டானது 320 சுற்றுக்கள் சுழல வேண்டும்.

பாதுகாப்பு உபாயங்கள்

வீட்டு மின் சுற்றுகளில் ஏற்படக்கூடிய  புவிப்பொசிவு மின்னோட்டம் பற்றியும் பாவனையாளரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் புவிபொசிவு மின்னோட்ட சுற்றுடைப்பான் பற்றியும் இங்கு விபரிக்கப்படும் மேலும் சுற்றினை உயர்மின்னோட்டத் திலிருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்தும் உருகி, எளிய சுற்றுடைப்பான் பற்றியும் இங்கு அறிந்து கொள்ள முடியும்.

புவிப்பொசிவு மின்னோட்டம்

 வீட்டில் நிலையாகவுள்ள மின்சுற்றியினூடாக பாயும் பின்னூட்டத்திற்கு மேலதிகமாக யாதும்மொரு மின்னோட்டம் புவிக்கு பாயும் மாயின்அம் மின்னோட்டமானது புவிப்பொசிவு மின்னோட்டம் எனப்படும்.
பொசிவான மின்னோட்ட மானது ஒருவரின் உடலினூடாக பாயும் போது உயிர்ச்சேதம் கூட ஏற்படலாம் அதனால் அவ்வாறான மின்பொசிவு ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டு மின் சுற்றில் பயன்படுத்தப்படும் வடங்களும்/ கம்பிகளும் சுமையும்

வீட்டு மின்சுற்றில் உள்ள துணைச்சுற்றுக்களுக்கு ஒத்துப் போகக்கூடியதும்

பாயும் ஓட்டத்துக்கு பொறுத்தமானதுமானவடங்களைத் தெரிவு செய்தலும், மின் குமிழ்கள். செருகித் தளம், மின் மோட்டார் போன்ற சுமைகள் பற்றியும் இங்கு விபரிக்கப்படும்.

வடங்களைத் தெரிவு செய்தல்

பல்வேறு சுமைகளுக்கு ஏற்ப சுற்றின் மூலம் பெறும் ஓட்டம் வேறுபடும்.
இவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களிலே பயன்படுத்த வேண்டிய வடங்களிலுள்ள கடத்திகளின் விட்டங்கள் கீழே காட்டப்பட்டுள்ளது. வடத்தினூடு பாயும் ஒட்டத்திற்கு ஏற்ப கடத்தியின் கடத்தியின் விட்டம் மாறுபட
விட்டம் மாறுபட வேண்டியளவாறு வேண்டும். இதன்படிnவிட்டம் இடங்கள் கீழே காட்டப்பட்டுள் வேறாக்கிக் கொள்ள முடியும்.
  1. கிலோ உவாற்று மணி மானியி லிருந்து வீட்டு மின்சுற்றின் பரம்பல் பெட்டி வரையும் கொண்டு செல்லும் வடமானது இங்கு வீட்டினுள்ளே காணப்படுகின்ற முழு மின் அளவினைத் தாங்கக் கூடிய வடமாக இருத்தல் வேண்டும். இக் கம்பியின் அளவு 7/ 1.04mm ஆகும்.
  2. மின் குமிழ்களைக்கொண்ட களுக்காக அங்கீகரிக்கப்பட்ட மின் விதிமுறைகளுக்கு ஏற்ப பாவிக்கக் கூடிய கம்பியின் அளவு 1/1.13 mm ஆகும்.
  3. 5A செருகித்தளங்களும் நக்கான சுற்றுக்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின் விதிமுறைகளுக்கு ஏற்பபயன்படுத்தக்கூடிய கம்பியின் அளவு 1/1.13 mm ஆகும்.
  4. 15A செருகித்தள சுற்றுக்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறை களுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டிய வடங்களின் கம்பிகளின் அளவு 7/0.67mm ஆகும்.
  5. 32 A சிறு சுற்றடைப்பான் ஒன்றைப்பயன்படுத்திட 100 சதுர மீற்றர்இற்குள் சுற்றொன்றை அமைக்கும்போது பயன்படுத்தும் கம்பியின் அளவு7/0.67 mm ஆகும்.
குறுக்குவெட்டு முகப்பரப்பிற்கு ஏற்பகடத்திகளினூடாக கொண்டு செல்லக்கூடிய மின்னோட்டம் அடங்கிய அட்டவணைகள் மின் விளக்குச் சுற்று
ஒரு இடத்திலிருந்து கட்டுப்படுத்தும், இரு தானங்களிலிருந்து கட்டுப்படுத்தும், பல இடங்களிலிருந்து கட்டுப்படுத்தும் மின் விளக்குச் சுற்றும் இருக்க முடியும். இதைத் தவிர புளோரொளிர்வுக் குழாய் விளக்கு, மின்விசிறி, மின் மணி முதலியவைகளும் இச்சுற்றிலேயே இருக்க முடியும். இவ்வாறான சுற்றொன்றிலே மின்னியல் சட்ட விதி களுக்கு அமைய மேலே குறிப்பிட ப்பட்டுள்ள 10 உபகரணங்களே இருக்க முடியும். உருவில் வீட்டு மின் சுற்றின் உப சுற்றொன்றில் உள்ள மின்விளக்குச்சுற்று காட்டப்பட்டுள்ளது.
Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »