60 நாட்களில் நீங்களும் மூன்றுபாடங்களிலும் 80% க்கு மேலதிகமாக புள்ளி பெறலாம்.

60 நாட்களில் நீங்களும் மூன்றுபாடங்களிலும் 80% க்கு மேலதிகமாக புள்ளி பெறலாம்.
என்னோட  அனுபவத்தில உங்களுக்கு ஒரு விஷயத்த சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.  ஒரு நம்பிக்கையோட இத வாசியுங்கள். அனேகமா உயர்தர  முதலாவதா கேக்குற சந்தேகம் “எப்பிடி உயர்தர பரீட்சைக்கு படிக்கினறது ?” . சரியான கேள்விதான் . இத பிறரிடம கேட்டு தெரிந்து கொள்வத தான் வேண்டும் என்று தெரிந்து கொள்ள,  கட்டாயம் என்று இல்லை ஆனால் நீங்க நல்ல மதிபெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டல் தெரிந்து  கொள்ள தான் வேண்டும்.

எனவே நமக்கு வரையரை யில்லாத நேரம் இருந்தால் ஏற்கனவே அனுபவமுள்ள வங்களிட்ட எதுவும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு ஒரு வழிமுறையில் முயற்சி செயலாம் அது பிழைக்கும் அல்லது அந்த அளவுக்கு பிறயேகமாக இருக்காது அதனால் இன்னொரு வழிமுறையில் படிவுங்கள்.  இப்பிடியே செனறு கடைசியில் இதான் படிக்கும் வழிமுறை என்று கண்டுபிடித்து விடுவீர்கள்.

இங்க பரீடசைக்கு மிக குறுகிய நேரம்  இருப்பதால். நீங்கள் அந்த வழிமுறை கண்டுபிடித்து படிக்க தெடங்கும் போது பரீட்சை இன்னும் 2/3 கிழமையில் நம்மை பார்து சிரித்து கொண்டு நிற்கும். படிக்கும் வழிமுறை  தெரிந்து படிக்குறதுக்க்கான தேவை என்னவென்ற விஷயம் உங்களுக்கு புரிந்து இருக்கும். பரீடசைக்கு 6 மாதம் இருக்கு என்டற ஒரு நிலமை வரும் போது ஒரு தனிப்பயம் வரத்தான் செய்யும் , பிறகு கொஞ்சம் கொஞ்சமா நாள் குறைந்து கொண்டே போகும். பாடத்திட்டம் முடிக்க இன்னும் கொஞ்சம் பாடம்  படிக்க வேண்டும் என்று இருக்கும். நாம் ஏதோ படித்த பாடத்தில் எந்த கேள்வி தந்தாலும் விடையளிக்கும் நபர்கள் மாதிரி படிப்பிக்கப்படாத பாடங்களை நினைத்து பயந்து கொண்டு இருப்போம்.
ஆனால் கேள்வி செய்தால் தான் தெரியும் முன்பு படித்த பாடங்கள் ஒரு கலக்க நிலைதான் இருக்கு, அதிலிருந்து மட்டுமே கேள்வி வந்தால் கூட நம்மளால் முழு  மதிபெண் எடுக்க முடியது என்று. அதனால்  இனிமேல் படிக்கப்போறது இருக்கட்டும், இதுவரைக்கும் படித்த பாடங்களுள் கேள்விகள் செய்து தயார்படுத்தி கொள்ளுங்கள், வருகின்ற சிக்கள்களை (Doubt) எல்லாம் தீர்த்து கொண்டு செல்லுங்கள்.

ஒரு கால அட்டவணை ஒன்றை தயார் படுத்திகொள்ளுங்கள்.உங்களுக்குத்தான் தெரியும் எந்த நேரம் என்ன பாடம் படித்தால் உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்று. ஒரு கால அட்டவணை கீழ் படியுங்கள். இதுவரைக்கும் நீங்க செய்த பரீடசைக்கு  விட்ட பிழைகளை விளங்காத கோட்பாடுகளை ( Theory)  விளங்கிகொள்ளுங்கள். அதை  விளங்கிகொள்ளாமல்  மாதிரி  பரீட்சைகளை செய்து எந்த பயனும் இல்லை. பாடங்களை எல்லாம் படித்து முடித்ததும் தான் கேள்வி செய்ய வேண்டும் என்டு நினைக்காமல் மேலோட்டமா படித்துவிட்டு கேள்வி செய்ய தொடங்காலம். சிக்கள் வர வர தீர்த்துகொண்டு செல்லுங்கள், இந்த நேரத்தில் 2005ல் இருந்து 2019 வரைக்கும் நடைபெற்ற கடந்த கால பரீட்சைக்கு வினாக்களுக்கு நேரம் வைத்து பார்பது நன்று. 2 hours கடந்த கால பரீட்சைக்கு 1-1¼ hours நேரம் வைத்து செய்து பாருங்கள்.

நேரமும் சரி source உம் சரி வரையறுக்கபட்டு தான் இருக்கும். அதனை ஒழுங்காக பயன்படுத்துங்கள். பழைய பாடம் தெளிவான என்று தோனும் போது புது பாடதை படிக்க தொடங்குங்கள். பொதுவா கடந்த கால பரீட்சை வினாதாள்களை தெளிவாகி கொண்டு போனால் அதிகமான மதிபெண் பெற முடியும். இதுவரைக்கும் கூறிய விடயங்கள் பௌதிகவியல்,இணைந்த கணிதம் , இரசாயனவியல் க்கு பொருத்தமா இருக்கும். உங்களுக்கான கால அட்டவணை கீழ் படியுங்கள்

இன்னும் நேரம் இருகின்றது யாருவெனாலும் நல்லா மதிபெண்பெறலாம். கடந்த கால பரீட்சை முதலில் செய்துபருங்கள். 2000-2019 வரைக்குமான கடந்த கால பரீட்சை வினாதாள்களை செய்துகொள்ளுங்கள், கடந்த கால பரீட்சை வினாதாள்களையும் சேர்த்து கோட்பாடுகளை (Theory) விளங்கிகொள்ளுங்கள். தனியாக குறிப்புகள் படித்துவிட்டுபரீட்சை  செய்யலாம் என்று இருக்க வேண்டாம், அது சாத்தியப்படாது. கடந்த கால பரீட்சை வினாதாள்களை செய்து விளங்கி கொண்டு மாதிரி வினாதாள்களை செய்யுங்கள், அதுவும் விளக்கவுரை இருக்கின்ற வினாதாள்களை மட்டும்நேரம் வைத்து செய்யுங்கள், செய்த வினாதாள்களுக்கு எல்லாம் மதிபெண் இடுங்கள், உங்களை நீங்களே மதிப்பிட்டு கொள்ளுங்கள், முன்வு செய்த வினாதாள்களை நீங்கள் பிழை விட்ட விடயங்களை அடுத்த வினாதாளில் சரியா செய்கின்ற அளவுக்கு விளங்கி படியுங்கள்.

நிறைய கேள்விகள் செய்கின்றது முக்கியம் இல்லை. கொஞ்சம் கேள்வி செய்தாலும் பிழை விட்டதெல்லாம் விளங்கி செய்யுங்கள்.

Heading la சொல்லியது போல் நடக்க வேண்டும் என்றால் அதுக்கு மருந்து அது உங்க கையில் தான் இருக்கின்றது , கடுமையா உழைப்பால் தான் வெற்றி பெறமுடியும். Hard-work மட்டும் போதாது, கொஞ்சம் smart-work உம் செய்யுங்கள்.

எவ்வாறு ஸ்மார்ட் ஸ்டடி படிப்பதற்கான  டிப்ஸ்கள்

நாம் அனைவரும் பரீட்சைக்கு முன்  ஒரு திட்டம் வைத்திருப்போம் உதாரணமாக இந்த இந்தப் பாடங்கள் படிக்க வேண்டும் தொலைக்காட்சிப் பார்த்துவிட்டு, இரவு படித்துவிட்டு காலையில் பரீட்சையை அருமையாக எழுதலாம் என்று இணைப்போம். ஆனால் பரீட்சையின் போது  நேற்று படித்தது இன்று மறைந்து விட்டதே என்று கவலைப் படுவோம். இப்போது நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் ஒரு பாடத்தை படிப்பதற்கு 3 Hr இடைவெளி விடாமல் படிக்க வேண்டுமா? அல்லது இடைவெளிவிட்டு படிக்க வேண்டுமா? சரியாக தூங்கவில்லை என்றால் படித்த மறந்து விடுமா? அதிகாலை படிப்பது நன்றா? அல்லது இரவில் கண்விழித்து படிப்பதன் மூலம் நன்றாக நினைவில் இருக்குமா? என்று பல கேள்விகள் நமக்குள் இருக்கும் அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் இப்பதிவு விடையளிக்கும்.
  • இடைவேளை எடுத்து படித்தல்

உதாரணம் ஒரு செடி வளர்வதற்கு மொத்தமாக நீரை ஊற்றுவதை விட தினமும் 5-10 min செடிக்கு நீர் ஊற்றினால் செடி நன்றாக வளரும். ஒரு நாளைக்கு 3 km நடக்க வேண்டும் என்றால் இடைவெளி இல்லாமல் நடந்து நீங்கள் கலைப்படைவதை விட காலையில் 1.5 km உம் மாலையில் 1.5km உம் நடந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். அதைபோல் 4 hr நீங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்தால் அதனை 1hr ஆக  பிரித்து பிரித்து படிக்கலாம். இது இடைவெளிவிட்டு படித்தல் ஆகும். இம் முறைழூலம் படித்தால் 40-50% ஆக அதிகமாக நினைவில் இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. நீங்கள் படித்ததை மறந்துவிட்டு திரும்பவும் கடின உழைப்பால் ஞாபகம் படுத்தினாள் அது மிக நன்றாக ஞாபகம் இருக்கும். நீங்கள் படிக்கும் போது இடையில் இடைவெளி விட்டு படிக்கும்போது முன்பு படித்ததை சற்று மறந்து இருப்பீர்கள் அதை பின்பு ஞாபகம் படுத்தும் போது மிக நன்றாக மனதில் பதியும்.
  • Test you Fluency

உங்களுக்கும் இதே போன்று நடந்திருக்க வாய்ப்புண்டு நீங்கள் புத்தகத்தை திறந்து ஒரு பாடத்தை படித்திருப்பீர்கள் அது படிக்கும் போது நினைவில் இருக்கும் அதனால் நீங்கள் அடுத்து படத்திற்கு சென்று விடுவீர்கள். ஆனால் அதே பாடம் பரீட்சைக்கு வந்துவிட்டால் நாம் கடினமாக யோசித்தாலும் நமக்கு ஞாபகம் வராது ஐயோ படித்ததுதானே ஏன் நமக்கு ஞாபகம் வரவில்லை என்று யோசிப்போம். இதைதான் Fluency Illusion . இருக்கும் போது நமது மூளை இந்தப் பாடம் புரிந்து விட்டது என்று ஒரு மாயத்தை ஏற்படுத்தும் ஆனால் உண்மையிலேயே அந்த பாடம் ஞாபகம் இருக்குமா என்று பார்த்தால் அது ஒரு கேள்விக்குறிதான்.
அதனால் ஒரு பாடத்தை பார்த்து நான்கு தடவைகள் படிப்பதைவிட ஒரு தடவை படித்து விட்டு புத்தகத்தை மூடிவிட்டு மூன்று தடவைகள் நமக்கு புரிந்ததா அல்லது ஞாபகம் இருக்கிறதா என்று நமது மூளையை பயன்படுத்தி டெஸ்ட் பண்ணும் போது தான் உண்மையிலேயே அந்தப் பாடம் நமக்கு ஞாபகம் இருக்கின்றதா என்று தெரியவரும். இதனை செயற்படுத்துவது சற்று கடினம் தான் ஏனென்றால் நமது மூளையை பயன்படுத்தி ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த நினைக்கும்போது சற்று கடினம் அதனால் தான் இதனை மறுத்து (Skip) செல்கிறோம். இதனால் தான் படிக்கும்போது புரிந்தது பரீட்சை எழுதும் போது நினைவில் வருவது இல்லை ஆகையால் எப்போதுமே Fluency Illusion விட்டுத்தள்ளுங்கள். இதனை விட்டு தள்ளிவிட்டு ஒரு பாடத்தை இரண்டு தடவைகள் வாசித்துவிட்டு அதனை ஐந்து தடவைகள விளங்கி படியுங்கள்.
  • நித்திரை கொள்வது நல்லது

இரண்டு மாணவ குழுக்களை வைத்து ஒரு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.  இரு குழுக்களையும் குறித்த நேரத்தில் குறித்த பாடத்தை படிக்க கூறினார்கள். குறித்த நேரம் முடிந்த பின்னர் ஒரு குழுவை சிறிது நேரம் உறங்க கூறினார்கள். ஆனால் ஒரு குழுவை உறங்குவதற்கு அனுமதிக்க வில்லை. ஒரு குழு உறங்கி விட்டு வந்த பிறகு இரு குழுக்களுக்கும் பரீட்சை வைத்தார்கள். உறங்கச் சென்ற குழு மற்ற குழுவை விட சற்று அதிக மதிப்பெண்கள் பெற்றார்கள். ஆராய்ச்சி முடிவில் நாம் உறங்கச் செல்லும்போது மூளையில் உள்ள தேவையில்லாத விடயங்கள் நினைவில் இருந்து அகன்று நாம் படித்த முக்கியமான விடயங்கள் மட்டும் நினைவில் இருக்கும் இதனால் தான் நித்திரையின் பினர்  நமக்கு ஒரு புத்துணர்ச்சியை கிடைப்பது போல் உணர்கிறோம்.
அதிகமான மாணவர்களுக்கு பரீட்சையின் போது எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்,காலையில் படிப்பது நல்லதா? இரவில் படிப்பது நல்லதா?  என்று நிறைய கேள்விகள் இருக்கும். இதற்கு விடை நீங்கள் இரவில் 6Hr நித்திரை கொள்வது நன்று. சில மாணவர்களுக்கு காலையில் அல்லது இரவில் படிப்பதா என்று கேள்வி இருக்கும். அது உங்களது விருப்பத்தில் தான் இருக்கின்றது. உங்களுக்கு இரவில் படித்து பழக்கம் இருப்பின் இரவில் படிக்கலாம். ஆனால் அதிகாலையில் படிப்பதுதான் நல்லது. நீங்கள் இரவில் நித்திரை கொள்ள வேண்டிய நேரத்தில் நித்திரை கொண்டு விட்டு அதிகாலையில் எழுந்து படிக்கும்போது உங்களது உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இரவில் படிக்கும் பழக்கத்தை மாற்றம் முடியவில்லை என்றால் சிறிது நேரம் உறங்கி விட்டு படிக்க தொடங்குங்கள். படிப்பதற்கு முக்கியமாக தேவையான விடயம் மூளையின் புத்துணர்ச்சி. இரவில் படிப்பதற்கு முன் சிறிது நேரம் உறங்கி விட்டு படிக்க தொடங்கினாள் படிப்பில் சற்று அதிக கவனம் செலுத்தலாம்.
  •  Use Zigarnick Effect

உதாரணமாக நாம் முடித்த வேலையை விட முடிக்கத வேலைக்கு தான் நமது யோசனை செல்லும். இதனால் தான் நாம் கடினமாக உழைத்து பரீட்சைக்கு முதல் நாள் படித்தாலும் பரீட்சை எழுதும் வரை நினைவில் இருக்கும் ஆனால் பரீட்சை முடிந்தவுடன் சில விடயங்கள் நமக்கு நினைவில் இருக்காது. ஆனால் நாம் எதனை பரீட்சை எழுதும்போது மறந்தது அல்லது கடினமாக இருந்ததோ அது மட்டும் நமக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். நமது மூளை இயல்பாகவே முடித்த வேலையை விட முடிக்காத வேலைக்கு தான் கவனம் செலுத்தும். அதனால் Zigarnick Effect யை கடினமான பாடத்தை படிக்கும்போதும் பயன்படுத்தலாம்.

நீங்கள் கடினமான பாடத்தை படிக்கும் போது அதிலேயே முழு நேரத்தையும் செலவழிக்காமல் இடைவெளியில் கொஞ்சம் ஓய்வெடுங்கள் உதாரணமாக நடந்துவிட்டு வரலாம் இல்லையென்றால் ஒரு இலகுவான பாடத்தை படித்து விட்டு திரும்பவும் அந்த கடினமான பாடத்தை படிக்க தொடங்கலாம். நீங்கள் அந்த இலகுவான பாடத்தை படிக்கும் போது Zigarnick Effect பயன்படுவதால் அந்த கடினமான பாடம் படிக்கவில்லை என்பதால் நமது மூளை அந்த கடினமான பாடத்திற்கு நன்றாக முக்கியத்துவம் கொடுக்கும்.

  • நீங்கள் படித்துவிட்டு மற்றவர்களுக்கு படிப்பித்தல்

நிறைய பாடங்களை படித்தாலும் அது நினைவில் இருக்காது. ஆகையால் நீங்கள் அந்தப் பாடத்திற்கு ஆசிரியராக மாற வேண்டும். அதற்கு நீங்கள் படித்த பாடத்திற்கு நீங்களாகவே உங்களுக்கு ஒரு பரீட்சையை வைக்கவேண்டும். பிறகு நீங்கள் படித்த விடயத்தை மற்றவர்களுக்கு படிப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு விடயத்தை நன்றாக படித்தால் மட்டுமே மற்றவர்களுக்கு படிக்க முடியும். மற்றவர்களுக்கு படிக்கும்போது சரியாக விளங்கப் படுத்தினாள் உங்களுக்கு நன்றாக புரியும். அதே நீங்கள் மற்றவர்களுக்கு சரியாக விளங்கப்படுத்த முடியாவிட்டால் உங்களுக்கே தெரியவரும் நீங்கள் முழுமையாக அந்த பாடத்தை படிக்கவில்லை என்று அதனால் மறுபடியும் நீங்கள் அந்த பாடத்தை படிப்பீர்கள்.

கடைசி நேரத்தில் பரீட்சைக்கு தயாராவது குறித்த சில முக்கியமான டிப்ஸ்களை பின்வருமாறு

பரீட்சை அட்டவனை, பரீட்சை பாடத்திட்டம் என்பவற்றை என்ன தான் முன்கூட்டியே அறிவித்தாலும்,அவசர அவசரமாக மாணவர்கள் பரீட்சைக்கு கடைசி நேரத்தில் படிக்கிறார்கள். அந்த நேரத்தில் பயன்பட கூடிய சில டிப்ஸ்களை பின்வருமாறு காணலாம்.

  • கால அட்டவணை

பரீட்சைக்கு மிக குறுகிய நேரம் இருக்கும் போழுது கால அட்டவணை மிக முக்கியம்.  கால அட்டவணை உங்கள் வசதிற்கு எற்ப தயாரித்துகொள்ளுங்கள். உம் : எந்த நேரம் என்ன பாடம் படித்தால் உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்று.

  • உறக்கமும் உணவும்

உறக்கமும் உணவும் மிக மிக முக்கியமாகும். பரீட்சை கடைசி நேரத்தில் அளவோடு உண்டு நிம்மதியாக உறங்க வேண்டும். அதிகமாக உண்டால் அல்லது நீண்ட நேரம் விழித்திருந்தால் பரீட்சையின் போது தூக்கம் வரும். கடைசி நேரத்தில் எளிதில் செரிமனமாகும் உணவை எடுத்து கொள்ள வேண்டும். இரவில் படிக்கும் போது சேர்வடைந்தல் டீ  போன்ற பாணங்களை நீங்களாகவே தயாரித்து சாப்பிட்டால் உற்சாகமாக படிக்கலாம்.

  • கடந்த கால பரீட்சை வினாதாள்களை செய்துபார்தல்

கடந்த கால பரீட்சை முதலில் செய்துபருங்கள்.கடந்த கால வினாதாள்களையும்  சேர்த்து கோட்பாடுகளை (Theory) விளங்கிகொள்ளுங்கள்.கடந்த கால பரீட்சைக்கு வினாக்களுக்கு நேரம் வைத்து பார்பது நன்று. 2 hours கடந்த கால பரீட்சைக்கு 1-1¼ hours நேரம் வைத்து செய்து பாருங்கள்.

  • மதிப்பெண்களை இலகுவாக பெறுதல்

எந்த பாடத்திட்டத்தில்  எந்த பகுதியில் அதிகமான கேள்விகள் வரும் என்பதை மதிப்பிட்டு தயாராக வேண்டும்.

கடுமையா உழைப்பால் தான் வெற்றி பெறமுடியும். கடின உழைப்பு மட்டும் போதாது, கொஞ்சம் Smart-work உம் செய்யுங்கள்.

 

 Best of luck , Keep practicing 

 

Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »