நாம் வாழ்கையில் முன்னேற பின்பற்ற வேண்டிய மூன்று செயல்கள்.

success
  •  20/20/20 சூத்திரத்தை பயன்படுத்துதல்.

நம்மில் பல நபர்கள் அதிகாலையில் எழும்ப வேண்டும் என்று இணைத்து அலாரம் வைத்துவிட்டு அலாரம் அடிக்கும் போது Snooze பட்டனை அளித்துவிட்டு திரும்பத் திரும்ப நித்திரை கொள்ள செல்வோம். ஆனால் இந்த உலகில் உள்ள புகழ்பெற்ற வியாபார முகவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சிலர் அவர்களுடைய மூளை இதயம் மற்றும் அவர்களுடைய உடல் நிலையை சரியாக பேணுவதற்காக பல பழக்க வழக்கங்களை செய்து முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்.

நாம் இந்தப் பதிவில் அதிகாலையில் எழும்ப கடைபிடிக்க வேண்டிய விடயங்களை பற்றி ஆராய்வோம்.முதலில் நம் மனதில் தோன்றுவது அதிகாலையில் எழுந்து நாம் என்ன செய்வோம் என்று நம் மனதில் ஒரு வினா எழும்பும் அதனால் நாம் 5am-6am வரை புதிய பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அது பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
இதுதான் நமது “Victory Hour” எனப்படும். இந்த Victory Hour ரை நாம் மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒரு ஒரு பகுதிகளிலும் 20min பயன்படுத்த வேண்டும்.

முதல் இருபது நிமிடங்களில்

நாம் நகர வேண்டும் அதாவது நமது உடலிருந்து வியர்வை வரும் அளவிற்கு நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் நமது உடல் வலிமை மற்றும் ஆராயும் திறன் அதிகரிக்கும். இதனை விஞ்ஞான முறையில் பார்த்தோமானால் நாம் உடற்பயிற்சி செய்யும் போது நமது மூளையில் BDNF (Brain Derived Neurotic Factor) எனும் இரசாயன பதார்த்தம் வெளியாகும். அதனால் நமது மூளையில் மன அழுத்தம் குறைவதோடு நமது Neurotic Connection அனைத்தும் வலிமையாகும். Neurotic Connection ஆராயும் திறன் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். நமது போட்டியாளர்கள் அனைவரும் தூங்கும் நிலைகளில் நாம் நமது மூளையில் புதிய Neurotic Connection களை வலிமைப்படுத்தி கொண்டிருப்போம்.

 இரண்டாம் 20 நிமிடங்கள்

நாம் நமது வாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டும் அதாவது நாம் எடுக்கும் முடிவுகளால் நாம் வாழ்க்கையில் என்னென்ன விடயங்கள் நடைபெறும் அது நமக்கு சரியான முடிவுகளாக இருக்குமா இல்லை தவறான முடிவுகளாக இருக்குமா என்று ஆராய வேண்டும். அதற்கு நாம் ஒரு குறிப்பு ஒன்றை எடுக்க வேண்டும் இந்த நாளில் நான் எனது வாழ்க்கை இலட்சியத்திற்கு எந்தெந்த விடயங்களை முயற்சி செய்தேன் என்று. இந்த நேரத்தில் நீங்கள் தியானம் கூட செய்யலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் சாதிக்க தேவையான விடயங்களை ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுக்க உங்களுக்கு இலகுவாக இருக்கும்.

மூன்றாம் 20 நிமிடம்

நாம் நமது திறமைகளை விருத்தி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் புத்தகங்கள் படிக்கலாம் அல்லது உங்கள் திறமையை விருத்தி செய்யும் எந்த ஒரு செயலையும் நீங்கள் அந்த நேரத்தில் செய்யலாம். இந்த 20\20\20 சூத்திரத்தை நீங்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தினார். 122hours நீங்கள் உடற்பயிற்சி செய்து இருப்பீர்கள் 122hours உங்கள் இடத்து வாழ்க்கை லட்சியங்களை அடைய முயற்சி செய்திருப்பீர்கள் 122hour ஏதாவது உங்கள் திறனை அதிகரிக்க படித்திருப்பீர்கள். நிறைய சாதனை புரிந்தவர்கள் இந்த சூத்திரத்தை பயன்படுத்தி தான் வாழ்க்கை லட்சியங்களை அடைந்திருப்பார்கள்

 

  • Twin Cycle of Elite Performance

நம்மில் அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது அதிகமாக முயற்சி செய்தால்தான் ஒரு உயர்வு கிடைக்கும் என்று. ஆனால் நிறைய வெற்றியாளர்களை ஆய்வு செய்தபோது அவர்களுடைய உழைப்பும் ஓய்வு நேரமும் தான் இருந்தது. நமது உயர்வு நாம் உழைக்கும்போது மற்றுமின்றி நாம் ஓய்வெடுக்கும் போதும் நமது உயர்வு தொடரும். உதாரணம் நாம் ஒரு விவசாயியை எடுத்துக்கொண்டால் ஒரு காலப் பகுதி அவர் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் அதற்குப் பிறகு ஒரு காலகட்டத்தில் அவர் ஓய்வாக இருப்பார் அதாவது நிறைய வேலைகள் இருக்காது. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் என்று தோன்றும் ஆனால் அந்த நேரத்தில்தான் ஒரு பயிரின் வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்கும். நம்மில் பலர் ஓய்வு ஒரு வளர்ச்சியாகவே பார்க்கவில்லை.

நாம் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம நாம் எவ்வளவு கடினமாக அழைக்கின்றோம் அந்த அளவிற்கு நமக்கு ஓய்வும் தேவை அப்போதுதான் நா அப்போதுதான் நாம் தொடர்ந்து உழைக்க முடியும். ஒரு ஆய்வில் நமது நித்திரை தான் நமது வாழ்க்கை நிலையை தீர்மானிக்கின்றது என்று தெரியவந்துள்ளது. நாம் நித்திரை செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளது நாம் நித்திரை செய்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னாடி நாம் நமது அனைத்து இலத்திரனியல் கருவிகளை செய்து விட வேண்டும் உதாரணம் நமது தொலைபேசி தொலைக்காட்சி போன்றவை ஆகும்.

ஏனென்றால் இது நீல நிற ஒளியை சிறப்பிக்கின்றது இது நமது நித்திரை ஹார்மோனை (Melatonin) பாதிக்கின்றது. இதற்கு பதிலாக நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் படிக்கலாம்.

  • The 4 Interior Empires

இந்த விடயத்தில் கூறவருவது என்னவென்றால் நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க நமது நேரத்தை நான்கு விடயங்களில் செயற்பாடுகளில் செயற்படுத்த வேண்டும். இந்த நான்கு செயற்பாடுகள் என்னவென்றால் Mind Set , Heart Set, Health Set, Soul Set, இதுதான் அந்த நான்கு செயற்பாடுகள்.

Mind Set

நிறைய மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் அவர்கள் இந்த மைக் செட் பற்றி மட்டுமே பேசி அதனை எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்று சொல்லித் தருகிறார்கள். இதில் நாம் மைக் செட் மற்றும் பயன்படுத்தினால் 25% மற்றுமே சந்தோசமாக இருக்கலாம். நாம் அதனையும் சேர்த்து பின்வரும் மூன்று விடயங்களை பின்பற்றினால் நமது வாழ்வில் 100% சந்தோசம் கிடைக்கும்.

Heart Set

அடுத்ததாக நமது ஆர் செட் நமது எமோஷனல் உணர்வை பயன்படுத்துகின்றது. நமது Mind Set நன்றாக இருந்தாலும் நமது வாழ்க்கையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அது நமது முடிவுகளை மாற்றிவிடும். அதனால் நமது வாழ்க்கை வெளிவட்டாரத்தில் நாம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாவிட்டால் நாம் சரியான முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் சந்தோசமாக இருப்போம்.

Health Set

நாம் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நமது உடல்நிலை சரி இல்லை என்றால் அந்த பணமே நமக்கு பயனில்லாமல் போய்விடும். நாம் வாழ்க்கையில் முன்னேறி அடுத்த தலைமுறையினருக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்றால் நம் வாழும் வாழ்க்கையை நல்ல உடல்நிலை யோடு வாழ வேண்டும். மிகப்பெரிய முதலாளிகள் மற்றும் சாதனையாளர்கள் ஏன் அவர்களுடைய உடல்நிலையில் கவனம் செலுத்துகிறார்கள் என்றால் நமது உடல்நிலை சரி இல்லாமல் இருந்தால் நாம் எந்த ஒரு செயலும் ஒழுங்காக செய்ய முடியாது என்பதால்தான் நமது உடல்நிலையை நாம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

Soul Set

நமது Mind Set , Heart Set, மற்றும் Health Set, நன்றாக இருந்தாலும் நாம் இப்போது பார்க்கப் போகும் செயற்பாடு மற்றும் இல்லை என்றார் மற்ற எதற்கும் பயனில்லாமல் போய்விடும். நாம் இந்த உலகில் பணத்திற்கு பின்னாடியும் நமது உடம்புக்கு பின்பும் நாம் ஓடிக்கொண்டே இருப்பதால் நமது Soul ஒரு நல்ல உணர்வைத் தராது. நாம் வாழ்க்கை பூர்த்தி செய்யவில்லை என்ற ஒரு மனப்பாங்கு வரும். அதனால் நாம் தியானம் மற்றும் நம்மைப் படைத்த இறைவனை நன்றி செலுத்தும் வகையாக தியானங்களில் ஈடுபட்டால் நமது வாழ்க்கை மிகச் சந்தோசமாக இருக்கும்.

Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »