5 நொடியில் உந்துதல் பெறுவது எப்படி?

5 நொடியில் உந்துதல் பெறுவது எப்படி?
நம்மில் அனேகமானவர்கள் இரவில் அலாரம் வைத்துவிட்டு காலையில் எழுந்து நான் படிக்க போகிறேன் இல்லை எனது புது ஐடியாவின் கீழ் வேலை செய்யப் போகிறேன் இன்று Plan செய்துவிட்டு தூங்கி விடுவோம். அனேகமாக எல்லோரும் நினைப்பது அவ்வளவு விரைவாக விடிந்துவிட்டது என்று நாம் அலாரத்தை பத்து நிமிடம் அல்லது ஐந்து நிமிடம் தள்ளுபடி செய்துவிட்டு திரும்பித் திரும்பி உறங்கச் செல்வோம். உதாரணமாக ஒரு பெண்மணி வாழ்க்கையில் மிகவும் கஷ்டங்களை எதிர்கொண்டாள். அவங்களுடைய உடல் எடை ஏறிக்கொண்டே சென்றது, அவர் மதுவுக்கு அடிமையாக இருந்தார், அவருடைய வேலை பறிபோய்விட்டது இதைப்போல் அவருடைய வாழ்க்கை மிகவும் கடினமாக செல்லுவதால் அவர் நினைத்தார் ஏன் இந்த காலை வர வேண்டும் ஏனெனில் தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இந்த கடினமான வாழ்க்கையை ஏன் அனுபவிக்க வேண்டும் என அவர் நினைத்தார்.
அவர் அவருடைய வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் தொலைக்காட்சியில் நாவினால் ஏவுகணை ஒன்று தேவைப்படும்போது தொடக்கத்தில் 5 4 3 2 1 0 என்ன எண்ணப்படும் ஏவுகணை ஏவப்படுகிறது அவதானித்தார் அதனைப் போல் நானும் காலையில் எழுந்து ஏவுகணை போல் வாழ்க்கையில் செல்லவாழ்கையில் செல்ல வேண்டும் என்று வேண்டு மென்று நோக்கம் ஒன்றை எடுத்து உறங்கச் சென்றுவிட்டார். அலாரம் அடித்தவுடன் 5 4 3 2 1 0 என்று கூறி எழும்பி விட்டார்.

எழுந்துவிட்டார் ஆனால் காலையில் உடற்பயிற்சி செய்வதற்காக காலணிகளை அணிய அவருக்கு விருப்பமில்லை. மறுபடி count பண்ண ஆரம்பித்து அவருடைய காலணிகளை அணிந்து விட்டார். பின்னர் அவர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார். இதைப் போன்று அவருடைய மடிக்கணினியில் வேலை செய்வதற்கு நோக்கம் வரவில்லை மறுபடி அவருடைய மனதை மாற்றுவதற்கு count பண்ண தொடங்கி அவர் அந்த வேலையை செய்ய ஆரம்பித்தார்.அவருக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு வேலையை செய்ய விருப்பம் இல்லை என்றால் இதனைப் போன்று அவர் அவரை Instant Motivation பண்ணிக் கொள்வார்.

இதனைப் பயன்படுத்தும் போது அவருக்கு வாழ்க்கை கஷ்டத்திலிருந்து படிப்படியாக உயர ஆரம்பித்தது. இந்த 5sec Rules கேட்கும்போது முட்டாள்தனமாக இருந்தாலும் இது உண்மையிலேயே பயன்படுகின்ற ஒரு விடயம். நாம் எப்போதுமே ஒரு புதிய விடயத்தை செய்ய ஆரம்பிக்கும்போது நமது மூளை நமக்கேற்ற செயற்படாது. எதுக்கு இதெல்லாம் செய்கிறோம் என்று நமது மூளை நம்மை செயற்பட விடாது. நமது மூளையில் ஒரு Programme உள்ளது. அது நமது புதிய புதிய முயற்சிகளை செய்யவிடாது அதனை நிறுத்த பார்க்கும் நாம் 5 Sec Rule லை பயன்படுத்தினால் இதை முறை அடித்து நம் புதிய முயற்சியில் ஈடுபடலாம் நாம் இந்த நூலை பயன்படுத்தாமல் விட்டால் நமது மூளை வேறு சிந்தனைகளுக்கு சென்றுவிடும் அந்த வேலையை செய்யவிடாமல்.

5 sec Rule  பயன்படுத்தினால் அந்த வேலையை செய்ய நமக்கு Motivation கிடைக்கும்.இதனைை சற்று விரிவாகப் பார்த்தால் Locus of Control என்கிற ஒரு ஆய்வைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். 1998 ஆண்டு ஐந்தாம் தர மாணவர்களைை வைத்து எல்லோரையும் ஒரு puzzle கொடுத்து அதனை முடிக்க கூறினார்கள். அதனை முடிக்க கடினமாக இருந்தது. அந்த puzzles  முடித்த மாணவர்களை மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின் அந்த Puzzles யை நிறுத்தக் கூறினார்கள் அதில் ஒரு மாணவர்களைை மட்டும் நீங்கள் கடினப்பட்டு puzzles செய்து முடித்தால் தான் உங்களது புள்ளி அதிகமாக எனக்கூறி மற்ற குழுவில் உள்ள மாணவர்களிடம் நீங்கள் ஸ்மார்ட் ஆக செயல்பட்டால்தான் உங்களது புள்ளி அதிகமாக உள்ளது எனக் கூறினார்கள். மறுபடியும் puzzlesசை முடிக்க கூறினார்கள். மறுபடி மிகவும் கடினமாக உள்ள puzzlesயை கொடுத்தார்கள் வந்த ரிசல்ட் எல்லோரையும் அதிர்ச்சி படுத்தியது.

எந்த குழுவை ஸ்மார்ட்டாக முடித்தார்கள் என்று கூறினார்களோ அவர்கள் இலகுவான puzzlesசை மட்டும்தான் முடிப்பதற்கு நேரத்தை  ஒதுக்கினார்கள். மற்ற puzzles சை முடிக்க முயற்சி கூட செய்யவில்லை. அவர்களிடம் இத puzzles சை முடிப்பதற்கு எப்படி இருந்தது என்று  கேட்கும்போது  இதனை முடிப்பதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை எனக் கூறினார்கள். ஆனால் கடினமாக முயற்சி செய்கிறார்கள் எனக் கூறிய மாணவர்கள் கடினமான Puzzles முடிக்கத்தான் மிக அதிகமான நேரத்தை ஒதுக்கினார்கள்.
Puzzles  கலை முடிக்க எவ்வாறு இருந்தது என்று கேட்கும்போது அவர்கள் மிகவும் Challenge ஆகவும் Super ஆக இருந்தது எனக் கூறினார்கள். ஸ்மார்ட் ஆணைக்குழுக்கள் என கூறிய மாணவர்களுக்கு Motivation இருக்கவில்லை. இதிலிருந்து தான் Ĺocus of Control என முடிவு வந்தது.

கீழே சோம்பேறித்தனத்தை ஒழிப்பது பற்றிவிளக்கப்பட்டுள்ளது

முதலில் சோம்பேறித்தனத்தை இருந்து விடுபட சிறிது சிறிதாக இலக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே ஒரு பெரிய இலக்கை வைத்துக்கொண்டு அதற்காக முயற்சி எடுக்கும் போது நம் மனதில் இதை நம் செய்ய முடியுமா என்ற ஒரு எண்ணம் வந்துவிடும். அதனால் பெரிய இலக்கை வெற்றி பெறுவதற்கு சிறிய சிறிய இலக்கை வைத்து செல்லுவது சிறந்தது. முதலாவது நமது இலக்கு நமக்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். பிறருக்கு முக்கியமானதாக இருக்கக்கூடாது.உதாரணம் உங்களுடைய பெற்றோர் உங்களை நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்வது இருக்கட்டும் உங்களுடைய பாடசாலையில் உங்களை நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவதாக இருக்கட்டும் அதனால் நான் நன்றாக படிக்க வேண்டும் என்று  யோசித்தால் நாம் நன்றாக படிக்க முடியாது. உங்களுக்கு சோம்பேறித்தனம் வந்து உங்களை மாற்றிவிடும். ஏனென்றால் அந்த இலக்கு உங்களுடைய இலக்கு அல்ல அதனால் சோம்பேறித்தனம் வந்து விடும். ஒரு இலக்கை வைக்கும்போது உங்களுக்கு அந்த இலக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான விடயங்களை அதில் இணைத்துக் கொள்ள முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு என்னதான் சோம்பேறித்தனம் இருந்தாலும் உங்களது இலக்கை அடைய செல்ல வேண்டிய இடத்தில் சென்று அமர்ந்து விடுங்கள். உதாரணம் ஆறு மணி அளவில் நீங்கள் படிக்க வேண்டும் என்றால் படிக்க வேண்டிய இடத்தில் சென்று அமர்ந்து விடுங்கள். அந்த வேலையை செய்தாலும் செய்யாவிட்டாலும் அந்த இடத்தில் போய் அமர்ந்து விடுங்கள் சிறிது நாட்கள் செல்ல செல்ல அந்த இடத்தில் செல்லும்போது படிக்கவேண்டும் என்று உங்களுக்கு இயல்பாகவே தோன்றிவிடும். ஒரு இலக்கை அடைய செல்லும்போது தேவையில்லாத விடயங்களை விட்டுவிட்டு அந்த இலக்கை அடைவதற்கான விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உதாரணம் படிக்கச் செல்லும் போது செல்பேசியை பயன்படுத்துதல் டிவி பார்த்தல் போன்ற தேவையில்லாத விடயங்களை தூக்கி போட்டுவிடுங்கள்.
அந்த இலக்கை அடைவதற்காக மட்டும் வேலை செய்தால் அந்த இலக்கை கண்டிப்பாக அடையலாம். சோம்பேறித் தனத்தை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் நீங்களாகவே இந்த நேரத்துக்குள் இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு Check list ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள்.
அந்த Check list பார்க்கும்போது உங்களுக்கே தோன்றும் நாம் இந்த நேரத்தில் இதனை செய்து முடிக்க வேண்டும் என்று. அடுத்த விடயம் நாம் அளவாக சாப்பிடுவது மற்றும் உறங்குவது தேவையான வலு உங்களிடம் இல்லை அல்லது தேவையான ஓய்வு உங்களிடம் இல்லை என்றால் உங்களது இலக்கை நோக்கி நீங்கள் செல்லுவதற்கு கடினம். காரணம் தேவையான உறக்கம் உணவு இல்லை என்றால் நமது மூளை சோர்வடையும் இதனால் நமக்கு சோம் பேறித்தனம் ஏற்படும். இதனால் உணவு உறக்கம் மீது சிறிது கவனம் செலுத்துங்கள் இதனை நீங்கள் பின்பற்றினால் உங்களது சோம்பேறி தனத்தை ஒழிக்கலாம்.
Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »