பெளதிகவியல் பரீட்சை -Physics Online Exam (வெப்பவியல்)

Physics Online Exam01
Online Exam Form
 வினாக்கள்

1. 150Cm நீளமான ஒரு கோல் ஒருமுனை 100⁰C  உள்ள ஆவி யாலும் மறுமுனை 0⁰C யில்  உட்பட திரவம் ஒன்றின் பனிக்கட்டி யாலும் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. கோலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 200⁰C வெப்பநிலை வழங்கப் படுகின்றது. இரு முனையிலும் உள்ள திரவம் நிலை மாற்றம் உள்ள திரவம் நிலைமாற்றம் அடைகின்ற தாயின் கோலின் எவ்வளவு தூரத்தில் 200⁰C  வெப்பம் வழங்கப்பட்டு இருக்கும். திரவத்தின் ஆவியாதல் மறை வெப்பம் 100⁰C யில் 5.4×10-3 JKg-1 திரவ பனிக்கட்டியின் குழுக்களின் தன் மறை வெப்பம் 80×10-3 JKg-1 ஆகும்.)

2. 20cm² குறுக்கு வெட்டுப் பரப்புடைய  இரு கோள்கள் முனைக்கும் முனை பொ ருத்தப்பட்டு ள்ளது.முனைகள் 100⁰C , 0⁰C இல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 80×10-3 JKg-1   உருகலின் தன் மறை வெப்பம் உள்ள ஒரு திரவ பனிக்கட்டியின் 648g ஐ நிலை மாற்றம் அடையச் செய்ய  ஒரு மணித்தியாலம்  தேவைப் படுகின்றது. 100⁰C இல்  உள்ள கோலின் கடத்தாறு 0.25wm-2K-1 லெனின் மற்றைய கோலின் கடத்தாறு யாது? சந்தியின் வெப்ப நிலை யாது?

3. A,B,C இன்னும் 3 சமநிலை கடத்திகள் முனைக்கு முனையை பொருத்தப்பட்டு சோர்த்திக்கோலின் முனைகள் 100⁰C , 0⁰C இல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இவற்றின் கடத்தாறுகள் முறையே 2K, K, 0.5K ஆக இருக்கின்றன. ஆயின் சந்திகள் ஒவ்வொன்றிலும் வெப்பநிலை. சேர்த்தி கோலின் வெப்பக்கடத்தாறு என்பவற்றை காண்க?

4. முறையே 0.125, 1.5, 1 wm-1 ⁰C-1  வெப்பக் கடத்தாறு உடைய கடத்திகள் ஆக்கப்பட்ட சேர்த்து கடத்தியின் ஒரு முனை -10⁰C மறு முனை 20⁰C  யில் உறுதி நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவை 137m² சம குறுக்கு வெட்டு பரப்பை உடையது. எனின் இந்த சந்தியில் உள்ள வெப்ப நிலைகள் முறையே யாது? இதனுடன் வலுப்பாய்ச்சல் யாது?

5.  2m நீளமான 1cm வெளி ஆரையும் 0.5cm உள் ஆரையும் உள்ள பொள்ளான உருளையினுள் 0.5Cm ஆரை உள்ள பிரிதொரு திண்ம உருளை உட்புகுத்தப் பட்டுள்ளது. இதன் ஒருமுனை 100⁰C யிலும் மறு முனை 0.5⁰C யிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. உள் உருளையின் கடத்தாறு 0.9×10² wm-2 K-1  பெரிய உருளையின் கடத்தாறு. 9×10² wm-2 K-1 எனின் இச் சேர்த்தி உருளையினூடு செல்லும் வெப்பப்பாய்ச்சல் வீதம் யாது? ஒவ்வொரு உருளையினூடு செல்லும் வெப்பப்பாய்ச்சல் வீதத்தின் வீதம் யாது?

6.
படத்தில் காட்டப்பட்ட அமைப்பில் A,B,C என்பன வெவ்வேறு பதார்த்தங்களின் ஆக்கப்பட்ட அமைப்பாகும். இவற்றின்  நீளங்கள் முறையே 46Cm,13Cm,12Cm உம் ஒரு முனையில் வெப்பநிலை 100⁰C, 0⁰C, 0⁰C உம் ஆகும். இவற்றின் கடத்தாறுகள் 92wm-2 K-1, 26 wm-2 K-1, 12 wm-2 K-1 உம் குறுக்கு வெட்டுப் பரப்புகள் சமனாகும் 42 Cm² உம் ஆகும். எனின் சந்தியின் வெப்பநிலை வெப்ப பாய்ச்சல் வீதம் என்பவற்றை காண்க?

7. சம நீளமுள்ள AB, BD, DE என்பன ஒரே நீளமும்,ஒரே குறுக்குவெட்டு பரப்பும் 46wm-2 K-1 கடத்தாறும் உடையது. BC, CE, CD என்பவை அதே குறுக்குவெட்டு நீளம் கொண்டவை. இவற்றின் கடத்தாறு 92wm-2 K-1 ஆகும்.
A ,E சந்தியின் வெப்பநிலை 60⁰C, 10⁰C ஆகும். எனின் B, C, D என்னும் சந்திகளில் வெப்பநிலை யாது?

8. 2mm தடிப்பு உடைய இரு கண்ணாடி தட்டுகள் 0.63 wm-2 K-1  வெப்பக்கடத்தாறு உடையது இவற்றின் நடுவே  0.049 wm-2 K-1  வெப்பக்கடத்தாறுடைய கண்ணாடி வைக்கப்பட்டு ஏற்றப்பட்டது பின்னர் தனி ஒரு 2mm  தடிப்புடைய  0.63 wm-2 K-1  வெப்பக் கடத்தாறுடைய கண்ணாடித் தட்டு வெப்பம் ஏற்றப்பட்டது அப்போது இரு நிலைகளிலும் அந்தங்களில்  வெப்ப நிலைகள் சமமாக இருந்தது. எனின் முதலாம் நிலையில் வெப்ப பாய்ச்சல் விகிதத்திற்கு 2ம் நிலையில் வெப்ப பாய்ச்சல் விகிதத்திற்கு இடையில
லுள்ள விகிதம் யாது ?

9. வீட்டில் உள் குளிர்ச்சியை பேணுவதற்கு தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படும் சீமெந்து கல் ஒன்றின் அமைப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 1m²  இதன் வெப்பக் கடத்தாறு 0.68wm-2 K-1  இவற்றின் வளியில் இதன் தடிப்பு  0.05m உம் எனின் கல்லின் உட்பகுதியின் வெப்ப நிலையை காண்க? வெப்ப பாய்ச்சல் வீதம் யாது?

10. வளியின் ஒரு பந்தின் நிறை 10g ஆகும். 15°C நீரில் இதன் நிறை 6g. 65°C யில் உள்ள நீரில் இதன் நிறை 6.05g. நீரின் கனவளவு விரிகைத்திறனை காண்க.? (பந்தின் ஏகபரிமான விரிகைத்திறன் 9×10-6 °C-1. 15° யில் நீரின் அடர்த்தி 1gCm-3)

11. 1m நீளமான இரு முனையும் மூடிய குழாயின் நடுவில் 0.1m நீளமான இரச இழை ஒன்று இருக்கத்தக்கதாக கிடையாக அது பிடிக்க ப்பட்டுள்ளது. பின்னர் அது நிலைக் குத்தாக பிடிக்கப்படும் போது இரச நிரல் இறங்கும் தூரம் யாது? (ஆரம்பத்தில் குழாயினுள் இருந்த அமுக்கம் 0.76mHg ஆகும்)

12.சீரான குறுக்குவெட்டுமுகமுள்ள ஒரு இரு முனையும் மூடிய கண்ணாடிக்குழாயின் மத்தியில் 5cm நீளமான இரச நிரலொன்று உள்ளது. குழாய் கிடையாக இருக்கும் போது இரச நிரல் மத்தியில் இருக்க காணப்பட்டது. இக்குழாய் தற்போது நிலைக்குத்துடன் 60° சாய்வாக வைக்கும்போது வளிநிரலின் நீளங்கள் முறையே 46Cm, 44.5Cm ஆகக் காணப்பட்டது எனின் ஆரம்ப நிலையில் குழாயினுள் அமுக்கம் யாது? (அறை வெப்பநிலை 30°C)

13.100Cm நீளமான குழாயின் மத்தியில் 10Cm இரசநிரல் இருக்குமாறு இருமுனையும் மூடிய குழாய் கிடையாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது குழாயினுள் வளிமண்டல அமுக்கம் நிலவுகின்றது. அப்போது வெப்பநிலை 27°C ஆகும். பின்னர் குழாயின் ஒரு பக்கம் 0°C) யிலும் மறுபக்கம் 127°C யிலும் நிலை நிறுத்தப்படுகின்றது எனின் இரசநிரல் அசைந்த துாரம்.? 0°C யில் அமுக்கம் என்பவற்றை காண்க.? (இரசவிரிவு கண்ணாடி விரிவு புறக்கணிக்கத்தக்கது)

14. மின்குமிழ் ஒன்றின் கனவளவு 250Cm3. அது  1×103 mmHg அமுக்கத்திலும் 27°C யிலும் உருவாக்கப்பட்டுள்ளது எனின் குமிழினுள் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை யாது? (போல்ட்ஸ்மானின் மாறிலி K = 1.381 10-23 JK-1 இரசத்தின் அடர்த்தி 13600Kgm-3)

15.ஒரு இரும்பு பாலத்தின் நீளம் 25Cm. அதன் குறுக்குவெட்டு 0.8Cm². இது இரு தாங்கிக்களுக்கு இடையில் பொருத்தப்பட்டுள்ளது. தாங்கிகள் விறைப்பானவையாகவும் இரும்பு பாலத்தின் நீட்டல் விரிவு குணகம் 1×10‐⁵ ⁰C‐¹  ஆகவும் இருக்கின்றது. எனின் பாலத்தின் வெப்பநிலையை 10⁰C யினூடு உயர்த்தும்போது 2×10¹⁰ Nm‐² யங்கின் மட்டு உடைய பாலத்தில் தொழிற்படும் இசை யாது?

16. நீட்டல் விரிவு குணகம் 1×10‐⁵ C‐¹ ஆகவுள்ள ஒரு பொட்கோளம் 10⁰C யில் 100Cm³ கனவளவு குழியைக் கொண்டுள்ளது. வெப்பநிலை 110⁰C ஆக மாற்றும்போது குழியின் கனவளவு யாது?

17. இரு சம பரப்புடைய A,B என்னும் உலோகங்கள் முறையை 10⁰C,20⁰C வெப்பநிலையில் உள்ளன. எவ் வெப்பநிலையில் மீண்டும் இவற்றின் பரப்புக்கள் சமனாக இருக்கும்.?
(αA= 1.9×10‐⁵ ⁰C‐¹, αB=1.1×10‐⁶ ⁰C‐¹)

18.A,B எனும் வெவ்வேறு உலோக பாலங்கள் சம குறுக்கு வெட்டுப் பரப்புடையது. இது படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு முனைக்கு முனை பொருத்தப்பட்டுள்ளது. இச் சேர்த்து பாலத்தின் நீளம் 1m ஆகும். Aயின் நீளம் 30Cm உம் எனின் இத்தொகுதியின் வெப்பநிலை 125⁰C ஆக அதிகரிக்கும் போது அதன் நீட்சி 1.91mm ஆக காணப்பட்டது எனின் B யின் நீட்டல் விரிவு குணகம் யாது? மேலும் கோல்கள் தற்போது விறைப்பான தாங்களுக்கு இடையில் பொருத்தப்பட்டு வெப்பம் ஏற்றிய போது அது எவ்வித நீட்சியும் அடையவில்லை எனில் B யங்கின் மட்டு யாது?

19. A எனும் உலோகக் கம்பி 25cm நீளம் உள்ளது. இதன் வெப்பநிலை 0⁰C யிலிருந்து 100⁰C  இற்கு உயர்த்தப்படும் போது 0.05 Cm நீட்சி அடைந்து. இதே வெப்பநிலையில் வித்தியாசத்தினூடு 40Cm நீளமுள்ள B எனும் கோலை வெப்பமேற்ற 0.04Cm நீட்சியடைந்தது. பின்னர் A யின் ஒரு பகுதி நீளத்தையும் வெட்டி முனைக்கு முனை பொருத்தப்பட்டு 50Cm நீள சேர்ந்தி கோள் பெறப்பட்டது. இதன் வெப்பநிலையை 0⁰C யிலிருந்து 50⁰C யிற்கு உயர்த்தப் படின் சேர்த்தி கோலின் விரிவு 0.03Cm ஆகும்.
எனின் A,B யின் நீட்டல் விரிவு குணகம் யாது? சேர்த்தி கோலில் ஒவ்வொரு துண்டின் உண்மை நீளம் என்ன?

மேல் தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடைகளை தெரிந்து கொள்ள தொடர்பு  படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளவும்………….

Kumaralingam Suganthan
I'm Develeper : Java,C#,C++,Css,Python, Javascript 😜 Founder of onlineexam.edu.lk🌏
Translate »